ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா: இபிஎஸ், ஓபிஎஸ் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

6 hours ago
ARTICLE AD BOX

Published : 25 Feb 2025 06:17 AM
Last Updated : 25 Feb 2025 06:17 AM

ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா: இபிஎஸ், ஓபிஎஸ் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

<?php // } ?>

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழாவில் நேற்று பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா உள்ளிட்டோர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் நடைபெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் மு.பா.அன்புச்சோழன் ஆகியோர் பங்கேற்று, ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-ம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்பு மலரை பழனிசாமி வெளியிட, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் 77 கிலோ எடை கொண்ட ஜெயலலிதா பிறந்தநாள் கேக்கை, பழனிசாமி வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஏற்பாட்டில், தொண்டர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். கட்சி அலுவலக வளாகத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, மகளிர் ஆரோக்கியத்துக்கான 11 பொருட்கள் அடங்கிய மருத்துவ பெட்டகத்தையும் பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து தையல் இயந்திரம், கிரைண்டர் உள்ளிட்ட நலதிட்ட உதவிகளையும் மகளிருக்கு வழங்கினார்.

பின்னர் அதிமுகவின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர் அணியை தொடங்கி வைத்து, அதில் இணைந்த 2 ஆயிரம் பேருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த அணியின் இலச்சினையையும் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச்செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, எஸ்.கோகுலஇந்திரா, காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக நொச்சிகுப்பம் பகுதயில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதே இடத்தில் பெங்களூரு வா.புகழேந்தியும் மரியாதை செலுத்தினார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

தலைவர்கள் வாழ்த்து - பிரதமர் நரேந்திர மோடி: தமிழகத்தின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவராகவும், சிறந்த நிர்வாகியாகவும் ஜெயலலிதா திகழ்ந்தார். எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருந்தார்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: இரும்பு பெண்ணாக நின்று, கடுமையான அரசியல் சூழ்நிலைகளை துரும்பு என்று சமாளித்து, கடுமையாகத் தெரிந்தாலும் மனதில் கரும்பு என்று நிரூபித்து, கட்சி எல்லை கடந்து பெண்கள் விரும்பும் தலைவியாக ஜெயலலிதா வலம் வந்தார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இந்நாளில் மக்களை வஞ்சித்து ஏமாற்றும் திமுக அரசையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article