ARTICLE AD BOX
சொல்லி அடித்த எலான் மஸ்க்.. Airtel உடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்.. இனி அதிவேக இன்டர்நெட் சேவை உறுதி..
ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவைகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்த ஏர்டெல் நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. எனவே விரைவில் இந்தியாவில் ஸ்பேஸ்எக்ஸ் உடன் ஏர்டெல் இணைந்து அதிவேக செயற்கைக்கோள் இணையதள சேவை வழங்குவது உறுதியாகியுள்ளது.

மேலும் ஏர்டெல் நிறுவனம் தற்போது முறைப்படி இந்த ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெளியான அறிக்கையின்படி, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவைகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவதற்காக ஏர்டெல் நிறுவனம் ஸ்பேகஸ்ஸ்பேஸ்எக்ஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதைக் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு நிறுவனங்களும் ஒத்துழைப்புக்கான சாத்தியமான பகுதிகளைப் பரிசீலித்து வருகின்றன. பின்பு ஏர்டெல் அதன் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை விற்பனை செய்து வணிகங்களுக்கு அதன் சேவைகளை வழங்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்தியா முழுவதும் கிராமப்புற பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு இணைய அணுகலை விரிவுபடுத்த ஸ்டார்லிங்கின்ன திறன்கனை பயன்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. இதுதவிர ஏர்டெல் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை ஏர்டெல்லின் நெட்வொர்க்கை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதையும், ஸ்பேஸ்எக்ஸ் இங்கு ஏர்டெல்லின் உட்கட்டமைப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் ஆராய்ந்து வருகிறது.
ஏர்டெல் நிர்வாக இயக்குநரும் துணைத் தலைவருமான கோபால் விட்டல், ஸ்பேஸ்எக்ஸ் உடனான கூட்டாண்மையை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் இந்த ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எனவும், அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் இணைப்புற்கான அவர்களின் உறுதிப்பாட்டை மேலும் நிரூபிக்கிறது என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று வந்த நிலையில், அங்கு எலான் மஸ்க்கை (Elon Musk) சந்தித்து பேசினார். மேலும் இருவரின் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில் விண்வெளி இயக்கம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். அதேபோல் இந்தியாவின் சீர்திருத்தம் முன்னேற்றத்துக்கான முயற்சிகள் பற்றி நான் பேசினேன் என குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின்பு அடுத்தடுத்து முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனம் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. குறிப்பாக செயற்கைக்கோள் இணைய சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.