ARTICLE AD BOX
சும்மா கிழி.. 12.4 எம்எம் பேஸ் டிரைவர்.. 52dB ஏஎன்சி.. 52 ஹவர்ஸ் பிளேபேக்.. IP55 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஆடியோ பிரியர்களுக்கு விருந்துதான் போல என்று சொல்லும்படி 12.4 எம்எம் டீப் பேஸ் டிரைவர், 52dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 52 மணி நேர பிளேபேக் மட்டுமல்லாமல் 360 டிகிபி ஸ்பாஷியல் ஆடியோ, IP55 ரேட்டிங் போன்ற பீச்சர்களுடன் ரியல்மி பட்ஸ் ஏர்7 (Realme Buds Air7) வெளியாகி இருக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ, டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி போன்ற பீச்சர்களை கொடுக்கும் இந்த ரியல்மி பட்ஸ் ஏர்7 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G), ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி (Realme P3 Ultra 5G) மற்றும் ரியல்மி பட்ஸ் ஏர்7 இன்று களமிறங்கின. இதில் ஆடியோ பிரியர்களை தட்டித் தூக்கும்படியான பிரீமியம் ஆடியோ பீச்சர்களுடன் ரியல்மி பட்ஸ் ஏர்7 வெளியாகி இருப்பதால், இதன் விற்பனைக்கு தேதிக்கு கஸ்டமர்கள் காத்திருக்கின்றனர்.

ரியல்மி பட்ஸ் ஏர்7 அம்சங்கள் (Realme Buds Air7 Specifications): பிரீமியம் லுக் கொடுக்கும்படி கிரிஸ்டல் அலாய் டிசைனில் (Crystal Alloy Design) மெட்டாலிங் பினிஷிங் கொண்டிருக்கிறது. இந்த டிசைனில் எல்இடி இன்டிகேட்டருடன் சார்ஜிங் கேஸ் கிடைக்கிறது. ஐவரி கோல்டு (Ivory Gold), லாவண்டர் பர்பிள் (Lavender Purple) மற்றும் மோஸ் கிரீன் (Moss Green) கலர்களில் வெளியாகி இருக்கிறது.
ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), 360 டிகிரி ஸ்பாஷியல் ஆடியோ (360° Spatial Audio) மற்றும் டைனாமிக் ஆடியோ (Dynamic Audio) சப்போர்ட் கொண்ட 12.4 எம்எம் டிரைவர்கள் கிடைக்கின்றன. இந்த டிரைவர்கள் பேஸ் ஆடியோ பிரியர்களுக்கு ஏற்ப பக்கா அவுட்புட் கொடுக்கும்படி டைனாமிக் டீப் பேஸ் (Dynamic Deep Bass) கொடுக்கிறது.
இந்த ஆடியோ பீச்சர்களை பயன்படுத்த ரியல்மி லிங்க் (Realme Link) ஆப் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) கோடக் சப்போர்ட் வருகிறது. இந்த ரியல்மி பட்ஸ் ஏர்7 மாடலில் 52dB ஸ்மார்ட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Smart Active Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
அதேபோல வாய்ஸ் கால்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும்படி 6 மைக்குகள் பேக் செய்யப்பட்டுள்ளன. இந்த ரியல்மி பட்ஸ் ஏர்7 மாடலின் சார்ஜிங் கேஸில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 10 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுக்கிறது. ஃபுல் சார்ஜில் 52 மணி நேரங்களுக்கு பிளேபேக் கிடைக்கும்.
அதோடு பட்களில் 13 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். அதுவே ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனில் பயன்படுத்தினால், பட்களில் 7.5 மணி நேரங்களுக்கும், கேஸில் 30 மணி நேரங்களுக்கும் பேக்கப் பெற்று கொள்ளலாம். எப்படி பார்த்தாலும் 35 மணி நேரங்களுக்கு மேல் பேக்கப் கிடைக்கிறது. கேமிங் அவுட்புட் கொடுக்க 45ms சூப்பர் லோவ்-லேட்டன்சி வருகிறது.
ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கொண்ட டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி, கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) மற்றும் ஸ்விப்ட் பேர் (Swift Pair) கிடைக்கிறது. டச் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். இந்த மாடலின் விலை ரூ.3,299ஆக இருக்கிறது. ரூ.500 அறிமுக சலுகை போக ரூ.2,799 விலைக்கு கிடைக்கிறது. மார்ச் 24ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்யலாம்.