‘சிங்கிளா இருந்தா சீக்கிரம் அங்கிள் ஆகிடுவீங்க’ - ஜெய்யை கலாய்த்த யோகிபாபு

5 hours ago
ARTICLE AD BOX

Published : 03 Feb 2025 09:31 AM
Last Updated : 03 Feb 2025 09:31 AM

‘சிங்கிளா இருந்தா சீக்கிரம் அங்கிள் ஆகிடுவீங்க’ - ஜெய்யை கலாய்த்த யோகிபாபு

<?php // } ?>

சத்யராஜ், ஜெய், பிரக்யா, யோகிபாபு நடிப்​பில் உருவாகி​யுள்ள காமெடி படம், ‘பேபி & பேபி’. பிரதாப் இயக்கி​யுள்ள இந்தப் படத்தை, யுவராஜ் பிலிம்ஸ் சார்​பில் பி.யுவ​ராஜ் தயாரித்​துள்ளார். டி.இ​மான் இசையமைத்​துள்ளார். இந்தப் படத்​தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளி​யீட்டு விழா சென்னை​யில் நடந்​தது.

நடிகர் யோகிபாபு பேசும்​போது, “இந்தப் ​படத்​தின் இயக்​குநர் பிரதாப், 17 வருட நண்பர். ஒரு படத்தில் இருவரும் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்​துள்ளோம். இன்று அவர் இயக்​குநர், நான் காமெடி நடிகன். நாம் உண்மையாக உழைத்​தால் நமக்​கானது, தானாக வந்து சேரும். இந்தப்​படம் மிக நல்ல அனுபவம். சத்யராஜ் சாருடன் எப்போதும் கவுண்டமணி சார் பற்றிப் பேசி சிரிப்​போம்.

நடிகர் ஜெய்​யிடம் இன்னும் எப்படி இளமை​யாகவே இருக்​கிறீர்கள் எனக்​கேட்​டேன், அவர், சிங்​கிளாக இருப்​ப​தால் யங்கா இருக்​கேன் என்றார். சீக்​கிரம் அங்கிளா ஆகிவிடப்​போகிறீர்​கள், கல்யாணம் செய்து கொள்​ளுங்​கள்” என்றார்.

ஜெய் பேசும்​போது, “இயக்​குநர் பக்காவாகத் திட்​ட​மிட்டு இந்தப் படத்தை அழகாக எடுத்​துள்ளார். ரத்தம், வெட்டுக் குத்து இல்​லாமல், மனம் ​விட்டுச் சிரித்து மகிழும் படமாக இது இருக்​கும்​” என்​றார்​.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Read Entire Article