ARTICLE AD BOX
தமிழில் மெகா ஹிட்தான்.. ஆனால் தெலுங்கில் எடுபடவில்லையாம்.. மதகஜராஜாவுக்கு வந்த சோதனை
சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு விஷால் நடித்த படம்தான் மதகஜராஜா. அவருடன் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் என பலர் நடித்திருந்தார்கள். 13 வருடங்கள் கழித்து இந்த வருட பொங்கலுக்கு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டிருக்கிறது. ஆனால் தெலுங்கு மொழியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
விஷாலுக்கு கடந்த சில வருடங்களாகவே வெற்றி எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை. இதனால் அவரும் அவரது ரசிகர்களும் கொஞ்சம் டல்லாகவே இருந்தார்கள். அப்படிப்பட்ட சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்தார். அந்தப் படம் மார்க் ஆண்டனி அளவுக்கு ஹிட் இல்லையென்றாலும் முதலுக்கு மோசமில்லை என்ற நிலைமையில் கடந்து சென்றது.
MGR: இதற்கிடையே கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் மதகஜராஜா படத்தில் நடித்தார் விஷால். அதில் அவருடன் அஞச்லி, வரலட்சுமி, சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா, மணிவண்ணன், மனோபாலா என பலர் நடித்திருந்தார்கள். விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். முதன்முறையாக சுந்தரும் விஷாலும் இணைந்திருந்ததால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அப்போதே எழுந்திருந்தது
இப்போது ரிலீஸ்: எந்தவித பிரச்னையும் இல்லாமல் படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் ரிலீஸில் பிரச்னை ஏற்பட்டது. தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட கடன் பிரச்னையால் படம் ரிலீஸ் செய்யப்படாமல் முடக்கப்பட்டது. ஒருகட்டத்தில் இந்தப் படத்தை சுந்தர். சியும், விஷாலுமே மறந்திருப்பார்கள். அதற்கு பிறகு அவர்கள் இணைந்து ஆம்பள என்ற படத்தையும் கொடுத்துவிட்டார்கள். சூழல் இப்படி இருக்க 13 வருடங்கள் கழித்து இந்தப் பொங்கலுக்கு மதகஜராஜா ரிலீஸானது.
பிறந்தநாளில் தயாரிப்பாளரனா சிம்பு.. 48வது படம்னு சொன்னது இப்போ 50 ஆக மாறிடுச்சு.. எப்போ ஆரம்பிச்சு?
மெகா ப்ளாக் பஸ்டர்: இத்தனை வருடங்கள் கழித்து ரிலீஸாவதால் ஆடியன்ஸின் இப்போதைய மைண்ட் செட்டுக்கும், பல்ஸுக்கும் படம் கனெக்ட் ஆகுமா என்ற அச்சம் படக்குழுவினருக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்று இயக்குநர் உட்பட படக்குழுவினர் நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கைப்படியே படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர். லேட்டாக ரிலீஸ் செய்தாலும் கன்ட்டென்ட் சரியாக இருந்தால் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
தெலுங்கில் எடுபடவில்லை: தமிழ்நாட்டில் மொத்தம் 50 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விஷாலும், சுந்தர்.சியும் மீண்டும் ஒரு படத்தில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் வெளியாகி ஹிட்டடித்த மதகஜராஜா தெலுங்கில் வெளியாகி படுதோல்வியை சந்தித்திருப்பதாகவும்; அங்குள்ள ரசிகர்களுக்கு படம் கனெக்ட் ஆகாததுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.