ARTICLE AD BOX
சனிபகவான் மீன ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் பெறப்போகிற 5 ராசிக்காரங்க இவங்கதான்...!
Saturn Transit in Pisces 2025: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப் பெயர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நவகிரககளில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் முக்கியமான கிரகங்களில் ஒன்றான சனிபகவானின் பெயர்ச்சியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கர்மாவை வழங்கும் சனிபகவான், ஒன்பது கிரகங்களில் செல்வாக்கு மிக்க கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, மேலும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக உள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, மார்ச் 29, 2025 அன்று, சனிபகவான் கும்ப ராசியிலிருந்து வெளியேறி மீன ராசிக்குள் நுழைகிறார். இது ராசிகளில் பிறந்தவர்களுக்கு நேர்மறை விளைவுகளையும், சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் சனிபகவான் மீன ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக் காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்கிறது. சனிபகவான் ரிஷப ராசியின் பதினொன்றாம் வீட்டிற்குள் நுழைகிறார். இந்த சூழ்நிலையில், ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெறுவார்கள். வேலையில் மேலதிகாரிகளுடனான உறவுகள் மிகவும் சாதகமாக இருக்கும்.
இதன் விளைவாக சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்கலாம். அவர்கள் தங்களின் துறைகளில் மகத்தான வெற்றியை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு அவர்கள் படிப்பில் நீண்டகால இருந்து வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வியாபாரிகளின் முன்னேற்றத்திற்கு இருந்து வந்த தடைகளை இப்போது மெல்ல நீங்கும்.
கடகம்
சனிபகவான் கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில் நுழைகிறார். இதன் காரணமாக அவர்களின் வாழ்க்கையில் வெற்றிகள் குவியப்போகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும். உங்கள் மனைவியுடன் நிலவி வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் வணிகர்கள் லாபம் ஈட்டலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிப்பதால் அவர்கள் சில கோவில்களுக்கு சென்று வரலாம். இதுவரை உங்கள் வாழ்க்கையில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு, இது முன்னேற்றம் மற்றும் பாராட்டுகளுக்கு ஏற்ற காலமாக இருக்கும்.
விருச்சிகம்
சனிபகவான் விருச்சிக ராசியின் ஐந்தாவது வீட்டிற்குள் நுழைகிறார். இந்த காலகட்டத்தில், விருச்சிக ராசிக்காரர்கள் மிகப்பெரிய நன்மைகளை அடையலாம், மேலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது நிறைவடையும். உங்கள் வேலையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை அடைய இந்த காலகட்டம் உங்களுக்கு உதவும்.
இந்த காலம் உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள், மேலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்வார்கள். வணிகத்தைப் பொறுத்தவரை, பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் ஈட்ட இது சிறந்த காலகட்டமாக இருக்கும். மொத்தத்தில் இது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே சிறப்பான பலன்களை அளிக்கும்.
மகரம்
சனிபகவான் மகர ராசியின் மூன்றாவது வீட்டிற்குள் நுழைகிறார். இந்த காலகட்டத்தில் பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் மகர ராசிக்காரர்கள் அவர்களின் நிதி நிலையை அதிகரித்துக் கொள்ள முடியும். அவர்களின் மேலதிகாரிகளின் ஆதரவால் அவர்கள் மிகப்பெரிய வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னிறைவும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
இந்த சனிப்பெயர்ச்சி காரணமாக அவர்கள் குழந்தைகளின் முன்னேற்றம் தொடர்பாக சில விஷயங்களை முன்னெடுக்கலாம், இது வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். அவர்களுக்கு செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவும், நட்பும் கிடைக்கும், மேலும் அவர்களின் எதிரிகளை வீழ்த்துவதற்கான வழிகளைக் கண்டறிவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பலன்களை வழங்கப்போகிறது, மேலும் அவர்கள் சனிபகவான் அருளால் பல விஷயங்களை சாதிக்கலாம். கும்ப ராசியின் இரண்டாவது வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் அவர்கள் பெரிய அளவில் சம்பாதிக்க முடியும், மேலும் எதிர்காலத்திற்காக சேமிப்பைத் தொடங்க முடியும். வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற அவர்களின் கனவு இப்போது நிறைவேறும்.
வேலை வாழ்க்கையில், கும்ப ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பிற்கான பலனை இப்போது அனுபவிக்க முடியும். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த காலத்தில் நிறைய நன்மைகளைப் பெறலாம். அவர்களின் நீண்ட கால ஆசைகளில் பல இப்போது நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)