சரியாகப் படிக்கவில்லை.. மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை!

3 hours ago
ARTICLE AD BOX

ஆந்திர மாநிலத்தில் சரியாகக் கல்வி கற்காத இரு மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வி. சந்திர கிஷோர் - ராணி தம்பதி. இவர்களுக்கு இரு மகன்கள் இருந்தனர். 37 வயதாகும் சந்திர கிஷோர் ஓஎன்ஜிசியில் பணியாற்றும் ஊழியராவார். இவர்களது மகன்கள் இருவரும் கல்வியில் மிகவும் மோசமான நிலையிலிருந்ததாக தொடர்ந்து வருத்தமடைந்து வந்தார். கல்வி இல்லையெனில் போட்டி நிறைந்த உலகை எப்படி எதிர்கொள்ள முடியும் எனக் கவலையில் ஆழ்ந்தார்.

இந்த கவலை நாளடைவில் கடும் கோபமாக மாறியது. ஒருகட்டத்தில் மிகுந்த ஆத்திரமடைந்த கிஷோர் வெள்ளிக்கிழமையான நேற்று காலை 10 மணியளவில் தனது இரு மகன்களையும் தண்ணீர் நிறைந்த பக்கெட்டில் மூழ்கடித்துக் கொலை செய்தார். பின்னர் கிஷோர் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக கிஷோரின் மனைவி ராணி காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்பு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலை செய்துகொண்ட இடத்தில் ஒரு கடிதமும் மீட்கப்பட்டது. அதுதொடர்பாக தடயவியல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Read Entire Article