ARTICLE AD BOX
சத்தமின்றி அறிமுகமானது புது Samsung 5ஜி போன்.. கம்மி விலை.. 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சாம்சங் கேலக்ஸி ஏ06 4ஜி போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கம்மி விலையில் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி ஏ06 5ஜி மாடல்.
சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A06 5G specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் மேலும் 720 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே டிஸ்பிளே வசதி இந்த போனில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
அதேபோல் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 dust and water-resistant rating) உடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பிளாக், கிரே, கிரீன் போன்ற நிறங்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போனின் விலை ரூ.10,499-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.11,499-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.12,999-ஆக உள்ளது.