ARTICLE AD BOX
கொஞ்சம் பொறுங்க.. 68W சார்ஜிங்.. 5100mAh பேட்டரி.. வருகிறது Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) ஸ்மார்ட்போன் தற்போது FCC சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதுவும் FCC சான்றிதழ் தளத்தில் XT2503-1 மற்றும் XT2503-3 என்ற மாடல் நம்பர் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ காணப்பட்டது. பின்பு ஆன்லைனில் கசிந்த தகவலின்படி 5ஜி, 4ஜி, புளூடூத், என்எப்சி, வைஃபை, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5100mAh பேட்டரி வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ அனைத்து அம்சங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 50 Fusion Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை வாங்கலாம்.
6.7 இன்ச் 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் 2400×1080 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் , எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே
ஆப்டிகல் இமேஜ் டெக்னாலஜி மற்றும் சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மாடல். அதேபோல் இதன் வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. இந்த கேமராவில் ஆல்-பிக்சல் போகஸ் (All-Pixel Focus) மற்றும் அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம்.
நைட் விஷன் (night vision), டில்ட் ஷிப்ட் (Tilt-Shift) பீச்சர்கள் இதன் ரியர் கேமராக்களில் உள்ளன. இந்த மோட்டோரோலா போனில் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) மற்றும் பேஸ் ரீடச் (Face Retouch) பீச்சர்கள் இந்த செல்பி கேமராவில் உள்ளன.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. பின்பு மூன்று ஓஎஸ் அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதேபோல் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்யூஷன் 5000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP68 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வசதியும் இந்த போனில் உள்ளது. தற்போது இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.