குஜராத் டைட்டன்ஸுக்கு வலுசேர்க்கும் நால்வர்: ஐபிஎல் 2025 அணி அலசல்

17 hours ago
ARTICLE AD BOX

Published : 14 Mar 2025 08:42 AM
Last Updated : 14 Mar 2025 08:42 AM

குஜராத் டைட்டன்ஸுக்கு வலுசேர்க்கும் நால்வர்: ஐபிஎல் 2025 அணி அலசல்

<?php // } ?>

அறிமுகமான 2022-ம் ஆண்டு சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று வியக்கவைத்த குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. தொடர்ந்து இரு முறை அசத்தியதால் 2024-ம் ஆண்டு அந்த அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சீசன் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த அணியின் உத்வேகம் அளிக்கக்கூடிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் வளைத்து போட்டது.

எனினும் புதிய கேட்டனாக ஷுப்மன் கில்லை நியமித்து 2024-ம் ஆண்டு சீசனை குஜராத் டைட்டன்ஸ் அணி சந்தித்தது. ஆனால் 8-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது. இதனால் இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் இலக்கு பிளே ஆஃப் சுற்றில் கால்பதிப்பதாக இருக்கக்கூடும். இதற்கு தகுந்தவாறு அணியை பலப்படுத்தும் விதமாக மெகா ஏலத்தில் அதிரடி முடிவுகளை குஜராத் அணி உரிமையாளர்கள் மேற்கொண்டனர்.

முகமது ஷமி, நூர் அகமது, டேவிட் மில்லர் ஆகியோரை வெளியேற்றிவிட்டு ஜாஸ் பட்லர், காகிசோ ரபாடா, கிளென் பிலிப்ஸ், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெரால்டு கோட்ஸி ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, மோஹித் சர்மா ஆகியோருக்கு பதிலாக முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். வாஷிங்டன் சுந்தரும் ஹைதராபாத் அணியில் இருந்து குஜராத் அணிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இவர்களுடன் ஏற்கெனவே தக்கவைக்கப்பட்டுள்ள ரஷித் கானும் ஆல்ரவுண்டராக மிரட்ட காத்திருக்கிறார். பேட்டிங்கில் சாய்க

பேட்டிங்கில் சாய் சுதர்ஷன், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா நடுவரிசையில் பலம் சேர்க்கக்கூடும். தொடக்க வீரராக ஷுப்மன் கில்லுடன் ஜாஸ் பட்லர் களமிறங்குவது அணியின் பலத்தை அதிகரிக்கக்கூடும்.

ஜாஸ் பட்லர், காகிசோ ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரஷித் கான் ஆகியோர் இந்த சீசனில் விளையாடும் லெவனில் வெளிநாட்டு வீரர்களாக நிச்சயமாக இடம் பெறக்கூடும். ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஜாஸ் பட்லர் தொடக்க வரிசையில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். கடந்த சீசனில் குஜராத் அணியில் பெரும்பாலான ஆட்டங்களில் தொடக்க பேட்ஸ்மேன்கள் பலம் சேர்க்கவில்லை. இம்முறை அந்த குறை நீங்கக்கூடும்.

ரூ.10.75 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ரபாடா ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளராக வலம் வருகிறார். 80 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 117 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். நியூஸிலாந்து ஆல்ரவுண்டரான கிளென் பிலிப்ஸ் பின்வரிசையில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளும் திறன் கொண்டவர். சுழற்பந்து வீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பது குஜராத் அணிக்கு கூடுதல் பலம்.

குஜராத் படை: ஷுப்மன் கில் (கேப்டன்), அனுஜ் ராவத், ஜாஸ் பட்லர், குமார் குஷாக்ரா, ஷெர்பேன் ரூதர்போர்டு, சாய் சுதர்ஷன், ஷாருக்கான், கரீம் ஜனத், மஹிபால் லோம்ரோர், கிளென் பிலிப்ஸ், ரஷித் கான், நிஷாந்த் சிந்து, மானவ் சுதார், ராகுல் டெவாட்டியா, வாஷிங்டன் சுந்தர், காகிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜெரால்ட் கோட்ஸி, முகமது அர்ஷத் கான், குர்நூர் சிங் பிரார், சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், குல்வந்த் கெஜ்ரோலியா.

தக்க வைக்கப்பட்ட வீரர்கள்: ரஷித் கான், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் டெவாட்டியா, ஷாருக்கான்.

கழற்றிவிடப்பட்ட முக்கிய வீரர்கள்: முகமது ஷமி, டேவிட் மில்லர்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article