ARTICLE AD BOX
கலக்குறே கார்ல் பெய்.. எடுத்ததுமே ரூ.5000 டிஸ்கவுண்ட்.. ஆபர் விலையில் Nothing Phone 3a விற்பனை!
கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை முதல், அதாவது 2025 மார்ச் 11 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த மாடலின் மீது 2 வகையான விற்பனை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதென்ன சலுகைகள்? நத்திங் போன் 3ஏ மாடலின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
நத்திங் போன் 3ஏ விலை, கலர் ஆப்ஷன்கள்: நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது பிளாக், ஒயிட் மற்றும் ப்ளூ ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நத்திங் போன் 3ஏ விற்பனை சலுகைகள்: எச்டிஎப்சி வங்கி (HDFC Bank) கார்டு, ஐடிஎப்சி வங்கி (IDFC Bank) கார்டு மற்றும் ஒன்கார்டு-ஐ (OneCard) பயன்படுத்தி நத்திங் போன் 3ஏ மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் (BankDiscount) கிடைக்கும்.
கூடுதலாக, முதல் நாள் விற்பனையிலேயே நத்திங் போன் 3ஏ மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் (Exchange Bonus) கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 11 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், பிளிப்கார்ட் மினிட்ஸ், குரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் பிற சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்க கிடைக்கும்.
நத்திங் போன் 3ஏ முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2392 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஸ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.77-இன்ச் அமோஎல்இடி எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜுடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது
இதில் OIS + EIS ஆதரவு உடனான 50ம்பி சாம்சங் ப்ரைமரி சென்சார் + 50எம்பி சாம்சங் டெலிஃபோட்டோ லென்ஸ் (2எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 4எக்ஸ் இன்-சென்சார் ஜூம், 30எக்ஸ் அல்ட்ரா ஜூம்) + 8எம்பி சோனி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி சாம்சங் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 19 நிமிடங்களில் 50% பேட்டரியை சார்ஜ் செய்யும் என்றும், 56 நிமிடங்களில் நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங்ஓஎஸ் 3.1 கொண்டு இயங்குகிறது. இதற்கு 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரைநத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, என்எப்சி, வைஃபை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி64 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது, இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பை வழங்கும். கடைசியாக இது இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.