ARTICLE AD BOX
Published : 22 Feb 2025 05:55 AM
Last Updated : 22 Feb 2025 05:55 AM
ஓடிபி இல்லாமல் வங்கி கணக்கை ஹேக் செய்யும் மோசடி கும்பல்

சைபர் குற்றவாளிகள் மோசடி செய்வதில் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பம், நுணுக்கங்களை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
அதன்படி தற்போது ஓடிபி இல்லாமலேயே வங்கி கணக்கை ஹேக் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் செயலில் அவர்கள் தற்போது ஈடுபட தொடங்கியுள்ளனர். போலீஸார் இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாம் பகிரும் மொபைல் எண்கள் மூலமாக தனிநபர்களின் விவரங்களை திருடும் இந்த சைபர் மோசடிக் கும்பல் அதனை பயன்படுத்தி சமீபத்தில் பொருட்கள் வாங்கியதாகவும், அதற்கு பரிசு கிடைத்துள்ளதகாவும கூறி செய்திகளை அனுப்புகின்றனர். மொபைல் பயனாளர் அந்த லிங்கை தொட்டவுடன் அவரது வங்கி கணக்கிலிருந்து உடனடியாக பணம் எடுக்கப்பட்டு விடுகிறது.
இதேபோல்தான், புதுடெல்லியைச் சேர்ந்த 26 வயது பெண் குரோமாவிலிருந்து அண்மையில் எச்பி லேப்டாப் வாங்கியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அடையாளம் தெரியாத நம்பரிலிருந்து பரிசு வென்றதாக வவுச்சர் ஒன்று வந்துள்ளது. அதில் குரோமா மற்றும் விஜய் சேல்ஸ் என்ற இரண்டு பெயர்களும் இடம்பெற்றுள்ளதை கண்டு சந்தேகமடைந்த அவர் அந்த லிங்கை தொடாமல் மோசடியிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- வன உயிர்கள் பாதுகாப்புக்கு தொடர்ந்து பாடுபடும் அசாமின் பூர்ணிமா தேவிக்கு 'டைம்' இதழ் பாராட்டு
- சமூக வலைதளங்களில் பாராட்டினால் முத்திரை குத்தும் போக்கு: நடிகை பிரீத்தி ஜிந்தா கவலை
- செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54% அதிகரிப்பு: சிஐஐ அறிக்கையில் தகவல்
- மதரஸா பட்டங்கள் குறித்த தீர்ப்பு: மாணவர்கள் மனு மீது பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்