ஈஷா யோகா மகா சிவராத்திரி மகத்தான வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து!

6 hours ago
ARTICLE AD BOX

ஆதி பரம்பொருளான சிவபெருமானுக்கு உகந்த தினமான மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை நினைத்து மனதாற வழிப்பட்டால், சிவனின் அருளை பரிபூரணமாக பெறலாம். சிவராத்திரியை கோலாகலமாக கொண்டாடும் இடங்களில் ஈஷா யோகா முதன்மையான இடமாக திகழ்கிறது. பல பிரபலங்கள் முன்னிலையில், லட்சகணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மகா சிவராத்திரி பெரும் விழா மகத்தான வெற்றியடைய இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்!

வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

கோவை ஈஷா யோக மையத்தில் சத்குருவின் தலைமையில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் என ஈஷா யோகா மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரதமரின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள சத்குரு மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Isha yoga

அனைவருக்கும் சிவன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்

இது தொடர்பான பிரதமரின் வாழ்த்து கடிதத்தில் "கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025-ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் மங்களகரமான நிகழ்வில் ஈடுபட்டுள்ள ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த அனைவருக்கும் சிவபெருமானின் எண்ணற்ற பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். விமரிசையாக கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி, ஆன்மீக ரீதியில் நம்மை மேன்மைபடுத்தும் தன்மைக்காக அதன் மீதான ஆழ்ந்த பக்தியையும், மதிப்பையும் ஏற்படுத்துகிறது. இவ்விழா விரதம், தியானம் மற்றும் சுயபரிசோதனைக்கான தருணமாகவும், அறியாமையின் மீதான அறிவின் வெற்றியையும் குறிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மகத்தான நாளில் இறைவனை அணுக வேண்டும்

மகா சிவராத்திரி என்பது சிவபெருமான் மற்றும் பார்வதியின் திருமணம் நடைபெற்ற நாள். இந்த நாளில் பக்தி, பிரார்த்தனைகள், சுய கட்டுப்பாடு மூலம் பக்தர்கள் ஆன்மீக ரீதியாக முன்னேறவும், உயர்ந்த தெய்வீக சக்தியுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆதியோகி சிலைகளை நிறுவும் முயற்சியைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

Isha yoga

மகா சிவராத்திரி விழா பெரிய வெற்றியடைய வேண்டும்

மகா சிவராத்திரி புவியியல், கலாச்சாரம், காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் தடைகளைத் தாண்டி, மனிதகுலத்தை அமைதி, சமநிலை மற்றும் நல்லிணக்கத்தின் பொதுவான புள்ளியில் இணைக்கின்றன. இயற்கையின் மீதான மதிப்பை வளர்க்கிறது. சிவபெருமானின் அருள் பெற சத்குரு தலைமையில் நடைபெறும் 2025 ஈஷா மகா சிவராத்திரி விழா வெற்றியாக அமையட்டும்." என்று பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நன்றி தெரிவித்துள்ள சத்குரு

இதற்கு நன்றி தெரிவித்து சத்குரு அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "உங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. பாரதத்தின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்றான மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். இந்த நாகரிகத்தின் உருவாக்கத்திற்கும் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கும் ஆதியோகியின் பங்களிப்பு எத்தகையது என்றால் அவர் கடந்த காலத்தின் சின்னமாக இல்லாமல், எதிர்கால தலைமுறையினருக்கு நல்வாழ்வு மற்றும் அதனையும் தாண்டி செல்வதற்கு மேலே தேடாமல் உள்நோக்கி தேடுவதற்கான தூண்டுதலாய் இருப்பார்.

மனித அனுபவங்கள் அனைத்துக்குமான மூலம் நமக்குள் உள்ளது. மனித பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் அனைத்துக்குமான தீர்வுகளும் நமக்குள் உள்ளன. இதுவே ஆதியோகியின் பங்களிப்பின் அடிப்படை. மேலும் இயல்பாகவே இது இந்த உலகின் எதிர்காலமாகவும் அமையும். மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி" என கூறியுள்ளார்.

Read more about: lord shiva tamilnadu coimbatore
Read Entire Article