ARTICLE AD BOX
மும்பை: இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் மற்றொரு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்காமல் போகலாம் என்றும், எனவே இதற்கு முன் என்ன நடந்ததோ அதை நினைத்து தான் மன அமைதியை அடைவதாகவும் கூறியுள்ளார்.
இதை அடுத்து விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது அவர் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே தான் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவேன் என்பதை இவ்வாறு சுட்டிக்காட்டி இருக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த பேட்டியால் விராட் கோலி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணி ஜூன் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார் என சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. விராட் கோலி நிச்சயமாக அந்த தொடரில் பங்கேற்பார் எனவும், 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் கோலி நிச்சயமாக ஆடுவார் எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் தான் விராட் கோலியின் இந்த பேட்டி வெளியாகி உள்ளது. இந்தப் பேட்டியில் விராட் கோலி தனது ஓய்வு பற்றி பேசி இருக்கிறார். இன்னொரு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் தான் பங்கேற்காமல் போகலாம் என்றும், எனவே இதற்கு முன் நடந்தவற்றை நினைத்து மன அமைதி அடைவதாகவும், ஓய்வுக்குப் பிறகு நான் என்ன செய்வேன் என தெரியவில்லை, ஒருவேளை அதிக அளவில் பயணம் செய்வேன் எனவும் கூறி இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணி கடந்த ஆண்டு மிக மோசமான தோல்விகளை சந்தித்து இருந்தது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என தோல்வி அடைந்த இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என தோல்வி அடைந்தது.
கேப்டன் பதவி போய்விடுமா? இதான் ட்விஸ்ட்.. ரோஹித் சர்மாவுக்கு குட் நியூஸ்.. பிசிசிஐ அதிரடி முடிவு
அந்தத் தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி படுமோசமாக செயல்பட்டிருந்தனர். அவர்களை டெஸ்ட் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் அதிகரித்தன. இதற்கிடையே அவர்கள் இருவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். அதனால் அவர்கள் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.