ARTICLE AD BOX
Published : 26 Feb 2025 04:41 PM
Last Updated : 26 Feb 2025 04:41 PM
‘இந்தி கற்பது புத்திசாலித்தனம்’ - தமிழக பொறியாளர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அட்வைஸ்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மொழி குறித்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுக்கப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பின் மறு வடிவம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தி திணிப்பா? - இந்நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் பணியாற்றும் ஸோஹோ நிறுவனத்தின் பொறியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, “இந்தியாவில் ஸோஹோ நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள், மும்பை, டெல்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார்கள். எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி, டெல்லி, மும்பை, குஜராத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொள்ளாததது எங்களுக்கு பெரிய குறைபாடாகும்.
இந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். கடந்த 5 ஆண்டுகளில் நான் இடைவிடாமல் இந்தியை கற்றுக்கொண்டேன். இப்போது இந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலைப் புறக்கணித்து விட்டு, மொழியைக் கற்றுக்கொள்வோம். இந்தி கற்றுக் கொள்வோம்... என்று தெரிவித்துள்ளார்.
கலவையான விமர்சனங்கள்: ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கள் இணையத்தில் கலவையான விமரசனங்களை பெற்று வருகின்றன. ஒரு நபர் “மக்கள் முன்னேற வேண்டுமெனில் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பாலான வேலை வாய்ப்புகள் பெங்களூரு மற்றும் சென்னையில் இருக்கிறது. குறிப்பாக, ஐடி நிறுவனங்களில் நல்ல வேலை வேண்டுமென்றால் மக்கள் தமிழ் அல்லது கன்னடத்தையும் கற்க வேண்டும்" என்று சுட்டிக்காட்டினார்.
மற்றொருவர், ‘இந்தி பேசுபவர்கள் ஏன் ஆங்கிலம் கற்க முடியாது’ என்று வினவியுள்ளார். மேலும் ஒருவர், ‘அவர்கள் ஏன் இந்தி கற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்?’ என கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீதர் வேம்பு, மொழி குறித்த விவாதங்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. நவம்பர் 2024 இல், பெங்களூருவில் வசிப்பவர்கள் கன்னடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பல ஆண்டுகளாக நகரத்தில் வசித்த பிறகு உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பது அவமரியாதை என்றும் கூறி இருந்தார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை