ARTICLE AD BOX
Published : 20 Jan 2025 08:21 AM
Last Updated : 20 Jan 2025 08:21 AM
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: கால் இறுதிக்கு ஜோகோவிச், அல்கராஸ் முன்னேற்றம்
<?php // } ?>மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றில் விளையாட ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், அமெரிக்க வீராங்கனைகள் கோ கோ கவுஃப், நடப்புச் சாம்பியன் அரினா சபலென்கா(பெலாரஸ்) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றுப் போட்டியில் 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ், பிரிட்டன் வீரர் ஜேக் டிராப்பருடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-5, 6-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, டிராப்பர் ஆட்டத்திலிருந்து விலகினார். இதையடுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அல்கராஸ் கால் இறுதிக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு 4-வது சுற்றுப் போட்டியில், டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சும், செக் குடியரசு வீரர் ஜிரி லெஹக்காவும் மோதினர். இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6(4) என்ற நேர் செட்களில் ஜிரி லெஹக்காவை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
பெடரர் சாதனை சமன்: மேலும், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் 15 முறை கால் இறுதிக்கு முன்னேறி, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனையை சமன் செய்தார் ஜோகோவிச்.
மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டாமி பால் 6-1, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேவிடோவிச் ஃபோகினாவை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-1, 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் உகோ ஹும்பர்ட்டை தோற்கடித்தார்.
சபலென்கா அபாரம்: மகளிர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான அரினா சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ரஷ்ய வீராங்கனையும், 14-ம் நிலை வீராங்கனையுமான மிர்ரா ஆன்ட்ரீவாவையும் வீழ்த்தினார். 3-ம் நிலை வீராங்கனையான கோகோ கவுஃப் 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக்கைச் சாய்த்தார்.
மற்ற ஆட்டங்களில் பவுலா படோ (ஸ்பெயின்) 6-1, 7-6 (2) என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஓல்கா டேனிலோவிக்கையும், ரஷ்யாவின் அனஸ்டாசியா பாவ்லியுசென்கோவா 7-6 (0), 6-0 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் டோனா வெகிக்கையும் சாய்த்தனர்.
போபண்ணா ஜோடி தகுதி: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, சீனாவின் ஜாங் ஷுவாய் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
நேற்று நடைபெற இருந்த 3-வது சுற்றில் ரோஹன் போபண்ணா, ஜாங் ஷுவாய் ஜோடியானது, அமெரிக்காவின் டெய்லர் டவுன் சென்ட், மொனாக்கோவின் ஹுகோ நியிஸ் ஜோடியை எதிர்த்து விளையாட இருந்தது. ஆனால் போட்டியிலிருந்து டெய்லர்-ஹுகோ ஜோடி விலகிக் கொண்டது. இதையடுத்து கால் இறுதிச் சுற்றுக்கு போபண்ணா, ஜாங் ஷுவாய் ஜோடி முன்னேறியுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை