ARTICLE AD BOX
Published : 19 Feb 2025 09:29 PM
Last Updated : 19 Feb 2025 09:29 PM
ஆப்பிள் ஐபோன் SE4 இன்று அறிமுகம்: விலை உள்ளிட்ட விவரங்கள்

சென்னை: ஆப்பிள் நிறுவனம் அதன் மலிவு விலை மாடலான ஐபோன் எஸ்இ4 மாடல் போனை இன்று இரவு அறிமுகம் செய்கிறது. இது இந்தியாவில் ப்ரீமியம் போன் பட்ஜெட்டில் வெளியாகும் மற்ற நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் என தகவல்.
கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டில் ஐபோன் எஸ்இ மாடல் போன் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அதன் 4-வது ஜெனரேஷனான எஸ்இ4 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாக உள்ளது. இது ஆண்ட்ராய்டு போன் பயனர்களை ஆப்பிள் ஐஓஎஸ் பக்கம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6.1 இன்ச் டிஸ்பிளே, ஏ18 ப்ராசஸர், 5ஜி இணைப்பு வசதி, அதிகபட்சமாக 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஐஓஸ் 18 இயங்குதளம், பின்பக்கத்தில் 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, ஃபேஸ் ஐடி உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கும் என தகவல். இந்தியாவில் இந்த போனின் விலை சுமார் 40,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. இந்திய நேரப்படி இன்று (பிப்.19) இரவு 11.30 மணிக்கு இந்த போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- டெல்லியின் அடுத்த முதல்வர் - யார் இந்த ரேகா குப்தா?
- திருப்பரங்குன்றம் பகுதியில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த 30 பேர் மீது வழக்குப் பதிவு
- சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தற்காலிகமாக தூய்மைப் பணிகள் தொடக்கம்
- “விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியதன் பின்னணியில் அரசியல்!” - எலான் மஸ்க்