அனைத்து கட்சி கூட்​டத்​துக்கு அழைப்பில்லை என வழக்கு தொடர்ந்த கட்சிக்கு அறி​வுறுத்​தல்

6 hours ago
ARTICLE AD BOX

Published : 04 Mar 2025 05:44 AM
Last Updated : 04 Mar 2025 05:44 AM

அனைத்து கட்சி கூட்​டத்​துக்கு அழைப்பில்லை என வழக்கு தொடர்ந்த கட்சிக்கு அறி​வுறுத்​தல்

<?php // } ?>

சென்னை: மக்​கள​வைத் தொகு​தி​கள் மறுசீரமைப்பு விவ​காரம் குறித்து விவா​திக்க தமிழக அரசு நாளை (மார்ச் 5) அனைத்​துக் கட்சி கூட்​டத்தை நடத்​துகிறது. இதற்​காக 45 கட்​சிகளுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் பதிவு பெற்ற தேசிய மக்​கள் சக்தி கட்​சிக்கு அழைப்பு விடுக்​க​வில்லை என்​றும் அதனால் இந்த கூட்​டத்​துக்கு தடை விதிக்க கோரி​யும் அக்​கட்​சி​யின் தலை​வர் வழக்​கறிஞர் எம்​.எல்​.ரவி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

அதில், தமிழகத்​தில் மொத்​தம் 183 அரசி​யல் கட்​சிகள் உள்​ளன. தமிழக அரசு தங்​களுக்கு ஏது​வாக 45 அரசி​யல் கட்​சிகளை மட்​டும் அழைத்​துள்​ளது ஏற்​புடையதல்ல. எனவே எங்​களது கட்​சி​யை​யும் அழைக்க உத்​தர​விட வேண்​டும் எனக் கோரி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்​ர​வர்த்தி முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் ஆஜராகி, பதிவு பெற்ற அனைத்து கட்​சிகளும் கூட்​டத்​தில் பங்​கேற்​கலாம். இதற்​காக அரசின் பொதுத்​துறைச் செயலருக்கு மனு​தா​ரர் விண்​ணப்​பித்​தால் பரிசீலிக்​கப்​படும் என்​றார்.

அதையடுத்து நீதிப​தி, பதிவு​பெற்ற கட்சி என்​ப​தற்​கான ஆதா​ரத்​துடன் மனு​தா​ரர் விண்​ணப்​பிக்க வேண்​டும் என்​றும் அவரது கட்​சியை கூட்​டத்​துக்கு அழைப்​பது தொடர்​பாக அரசு பரிசீலிக்க வேண்​டும் என்றும் உத்தரவிட்டார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article