ARTICLE AD BOX
அந்த பயம் இருக்கணும்.. USB டைப்-சி போர்ட் இல்லாமல் புதிய iPhone.. புஸ்ஸ்னு போன Apple-ன் அடேங்கப்பா ஐடியா!
யூஎஸ்பி டைப்-சி போர்ட் இல்லாமல்.. அதாவது சார்ஜிங் போர்ட் இல்லாத புதிய ஐபோன் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதென்ன மாடல்? ஏன் இந்த யோசனை கைவிடப்பட்டது? இதோ விவரங்கள்:
ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மனின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ஏர் (Apple iPhone 17 Air) மாடலை யூஎஸ்பி டைப்-சி போர்ட் இல்லாமல் வெளியிட கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டது. இருப்பினும், சில கடைசி நிமிடத்தில் அதில் இருந்து பின்வாங்கியது.

மேலும் மார்க் குர்மனின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ஏர் மாடலை முழுமையாக வயர்லெஸ் ஆக்குவது குறித்து பரிசீலித்தது, இந்த மாடல் மேக்சேஃப் சார்ஜிங்கை மட்டுமே நம்பியிருக்கும்படி உருவாக்க நினைத்தது. இருப்பினும், "யூஎஸ்பி-சி சார்ஜிங் கட்டாயம்" என்கிற ஐரோப்பிய விதிகளுக்கு பயந்து, ஐபோன் 17 ஏர் மாடலில் டைப்-சி போர்ட்டை பேக் செய்ய வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்தது.
ஆப்பிள் நிறுவனம் வெறும் 5.5 மிமீ தடிமன் கொண்ட மிகவும் ஸ்லிம் ஆன ஐபோன் 17 ஏர் மாடலில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், இதுவரை இல்லாத அளவில் மிகவும் மெலிதான ஐபோன்களில் ஒன்றாக இது மாறும். இது 6.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் மற்றும் ஐபோன் 16 பிளஸை போலவே சுமார் $900 டாலர்கள் என்கிற விலைக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அளவிற்கு மெலிதான வடிவமைப்பை அடைய, ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது ஸ்பீக்கரை அகற்றி, ரியர் கேமராவில் சிங்கிள் சென்சாரை மட்டும் பேக் செய்யலாம். இருப்பினும் ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது கேமரா கண்ட்ரோல் மற்றும் ப்ரோமோஷன் உடனான ஸ்மூத் டிஸ்பிளே போன்ற சில உயர்நிலை அம்சங்களையும் பெறும்.
பெரும்பாலான ஸ்லிம் போன்கள் சிறிய பேட்டரிகளை பேக் செய்யும்படி திட்டமிடப்படுகின்றன. ஆனால் ஆப்பிள் இந்த சிக்கலை சரிசெய்யும் வேலையில் இருப்பதாகவும், ஸ்லிம் ஆன பாடி இருந்தபோதிலும் பேட்டரி லைஃப்பை வலுவாக வைத்திருக்க ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ஏர் மாடலின் டிஸ்பிளே, சிப்செட் மற்றும் சாஃப்ட்வேரை ரீடிசைன் செய்துள்ளதாகவும் குர்மன் தெரிவிக்கிறார்.
ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது ஆப்பிளின் முதல் இன்-ஹவுஸ் 5ஜி மோடம், சி1 சிப்பை பேக் செய்யும் மாடல் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் வேகமான 5ஜி பேண்ட் ஆன எம்எம்வேவ்-ஐ (mmWave) இது ஆதரிக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
வருங்காலத்தில் ஆப்பிள் நிறுவனம் சார்ஜிங் போர்ட் இல்லாத ஐபோன்களை வெளியிடுமா? இந்த முறை (ஐபோன் 17 சீரீஸில்) முழுமையான வயர்லெஸ் ஐபோனை அறிமுகம் செய்ய வேண்டாம் என்று ஆப்பிள் முடிவு செய்துள்ளது. ஆனால் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்படுவதால், போர்ட் இல்லாத ஐபோன் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இப்போதைக்கு, ஐபோன் 17 ஏர் ஸ்லிம் ஆகவும், மேம்பட்டதாகவும் இருக்கும் - அதே நேரத்தில் சார்ஜிங் போர்ட்டையும் தக்கவைக்கும் என்பது மட்டும் உறுதி!
ஆப்பிளின் புதிய ஏர் மாடலை போலவே ஒன்பிளஸ் நிறுவனமும் அதன் ஒன்பிளஸ் 13 சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் புதிய மினி வேரியண்ட்டை (OnePlus Watch 3 Mini Variant) கூடிய விரைவில் அறிமுகம் செய்யலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.