அதே Mobile நம்பர்.. ஆனா BSNL நெட்வொர்க்கிற்கு மாற வாய்ப்பு.. Jio, Airtel, Vi யூஸர்ஸ் உடனே இதை செய்யலாம்..

4 days ago
ARTICLE AD BOX

அதே Mobile நம்பர்.. ஆனா BSNL நெட்வொர்க்கிற்கு மாற வாய்ப்பு.. Jio, Airtel, Vi யூஸர்ஸ் உடனே இதை செய்யலாம்..

News
oi-Sharath Chandar
| Published: Friday, February 21, 2025, 11:47 [IST]

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தொலைத்தொடர்பு நெட்வொர்க்கில் (Telecom network) இயங்கும் உங்கள் சிம் கார்டை எளிமையான 5 வழிமுறைகளை பின்பற்றி, வீட்டில் இருந்தபடியே பிஎஸ்என்எல் (BSNL) நெட்வொர்க் சேவைக்கு சிம் போர்ட்டபிலிட்டி (SIM portability) செய்துகொள்ள அனுமதிக்கும் புதிய சேவை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். உங்களிடம் எந்த நெட்வொர்க் சிம் இருந்தாலும் சரி, இந்த செயல்முறை நிச்சயம் பயனளிக்கும்.

ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்றழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் ஜியோ (Jio) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் சமீபத்தில் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தின. அதற்கு பிறகு, மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை மட்டும் வழங்கும் அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற டெலிகாம் நிறுவனத்திற்கு மக்கள் மாறத் துவங்கினர்.

அதே Mobile நம்பர்.. ஆனா BSNL நெட்வொர்க்கிற்கு மாற வாய்ப்பு..

அதே Mobile நம்பர்.. ஆனா BSNL நெட்வொர்க்கிற்கு மாற வாய்ப்பு:

மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் BSNL நெட்வொர்க்கிற்கு மக்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற துவங்கியுள்ளனர். உங்களிடம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற எந்த நெட்வொர்க் சிம் கார்டு இருந்தாலும், நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதே எண்ணுடன் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாற பிஎஸ்என்எல் தற்போது அனுமதிக்கிறது. இதை நீங்கள் சிம் நெட்வொர்க் போர்ட்டபிலிட்டி (SIM network portability) மூலம் செய்து முடிக்கலாம்.

உங்கள் மொபைல் எண்ணை BSNL நெட்வொர்க்கிற்கு நீங்கள் மாற்றத் தயாராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றவும்:

- மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி (mobile number portability) சேவையை பயன்படுத்துவதற்கு முன், அவுட் ஸ்டேண்டிங் பில்கள் (outstanding bills) எதுவும் பெண்டிங் (pending) இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ளுங்கள்.

- உங்கள் ஏர்டெல், ஜியோ அல்லது விஐ டெலிகாம் ஆபரேட்டர் உடன் நிலுவையில் உள்ள அனைத்து பில்களும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

- நிலுவை தொகை ஏதேனும் இருந்தால், உங்கள் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி (mobile number portability) நிராகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

யுனிக் போர்டிங் கோட் (unique porting code):

- யுனிக் போர்டிங் கோட் (unique porting code) என்ற UPC கோட் எண்களை நீங்கள் உருவாக்க வேண்டும்.

- இதை உருவாக்க PORT என்று உங்கள் மெசேஜ் பாக்ஸில் டாய் செய்து 1900 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்.

- உங்களுக்கு UPC கோட் விபரங்கள் SMS மூலம் அனுப்பிவைக்கப்படும்.

- இந்த UPC கோட் 15 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

- ஜம்மு & காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இந்த UPC கோட் 30 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

புது BSNL சிம் கார்டு வாங்க தயாராகுங்கள்:

- BSNL சேவை மையம் அல்லது சில்லறை விற்பனைக் கடைக்குச் செல்லவும்.

- BSNL விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

- உங்கள் ஆதார், PAN அல்லது பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணங்களின் நகலை சமர்ப்பிக்கவும்.

- புதிய BSNL SIM கார்டிற்கான கட்டணத்தை செலுத்தவும்.

- உங்கள் பழைய நெட்வொர்க் சிம் கார்டில் போர்ட்டபிலிட்டிக்கான அங்கீகார SMS வந்தவுடன் BSNL சிம் கார்டை பயன்படுத்த துவங்கலாம்.

இந்த செயல்முறைகளை பின்பற்றி மிகவும் எளிமையாக உங்கள் தனியார் நெட்வொர்க் சிம் கார்ட் நம்பரை அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாற்றம் செய்து, இனி மலிவு விலை திட்டங்களை தேர்வு செய்து, தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Jio Airtel Vi Users Now Can Change To BSNL Network With Same Mobile Number Using SIM Portability
Read Entire Article