அதான் அம்பானி.. ரூ.198-க்கு இறக்கிட்டாரு.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. 100 எஸ்எம்எஸ்.. Jio-க்கு மூன்று!

6 hours ago
ARTICLE AD BOX

அதான் அம்பானி.. ரூ.198-க்கு இறக்கிட்டாரு.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. 100 எஸ்எம்எஸ்.. Jio-க்கு மூன்று!

News
oi-Harihara Sudhan
| Published: Tuesday, March 4, 2025, 13:09 [IST]

இதுபோதுமே அம்பானி சார் என்று சொல்லும்படி 2 ஜிபி தினசரி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) கிடைக்கின்றன. இந்த திட்டங்களை ரூ.500 பட்ஜெட்டுக்குள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆகவே, ரூ.198 முதல் ரூ.445 வரையில் திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் ஓடிடி மற்றும் வேலிடிட்டிக்கு ஏற்ப விலையில் மாற்றங்கள் இருக்கிறது. இதில் எந்த திட்டம் உங்களது பட்ஜெட்டில் கிடைக்கிறது? விவரம் இதோ.

முதலில் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் ஜியோ ரூ 198 ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio Rs 198 Prepaid Plan) பற்றி தெரிந்து கொள்வோம். சொல்லப்போனால், இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கிடைக்கும் மலிவான விலை கொண்ட திட்டமாகும். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G Data) சலுகைகள் கிடைக்கிறது.

அதான் அம்பானி.. ரூ.198-க்கு இறக்கிட்டாரு.. வாய்ஸ் கால்கள்.. Jio-க்கு!

அதேபோல வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எ்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. 5ஜி டேட்டா இருப்பினும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் (Post Data) பயன்படுத்தலாம்.

இந்த சலுகைகள் மட்டுமல்ல, ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகை கிடைக்கிறது. இவ்வளவு சலுகைகள் கிடைத்தாலும் அடிமட்ட விலைக்கு கிடைப்பதால் 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. வேலிடிட்டி குறைவாக இருந்தாலும், டேட்டா அதிகப்படியாக வேண்டும் என்றால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இதற்கு அடுத்து ஜியோ ரூ 349 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 349 Prepaid Plan) இருக்கிறது. இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களை பயன்படுத்தலாம். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது.

இந்த டேட்டா சலுகைகள் போக முந்தைய திட்டத்தில் கிடைத்தபடி அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. மேலும், ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகள் இதில் கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டிக்கு ஏற்ற பக்காவான 2 ஜிபி திட்டமாகும்.

இந்த திட்டத்தை போலவே வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் வேண்டுமானால், உங்களுக்கு ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 445 Prepaid Plan) பக்கா தேர்வாக இருக்கும். ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு கூடுதலாக 11 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. கூடவே ஜியோ கிளவுட் சலுகை உள்ளது.

அதாவது, முந்தைய திட்டத்தை போலவே 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ், 100 எஸ்எம்எஸ், 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இதுபோக சோனிலிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன்நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, பிளாட் மராத்தி, சாவ்பால் போன்ற ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Reliance Jio 2GB Daily Data Plans Under Rs 500 With Unlimited Voice Calls Free 5G OTT Subscriptions
Read Entire Article