ఇది న్యాయమా నాయుడు? கெத்துக் காட்டும் மு.க.ஸ்டாலின்… வெத்தாய்ப்போன சந்திரபாபு நாயுடு..!

7 hours ago
ARTICLE AD BOX

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொளைகை தொடர்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியை மூன்றாவது மொழியாக அமல்படுத்துவதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அத்தோடு, ஸ்டாலின் சமீபத்தில் பட்ஜெட் ஆவணத்தில் ரூபாய் சின்னத்தை தமிழ் மொழியால் மாற்றியமைத்தார்.

இந்த சம்பவம் தென்னிந்தியாவில் இந்திக்கு எதிரான பாரம்பரிய எதிர்ப்பாக மீண்டும் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க முழுமையாக தயாராக இருப்பதாக மத்திய அரசு தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கிடையில், தென்னிந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் இந்திக்கு ஆதரவுடன் ஒரு சமநிலையான அணுகுமுறை காணப்படுகிறது. முதலில் பவன் கல்யாண், இப்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மொழிப் பிரச்சினை தொடர்பான போராட்டத்தில் இருந்து ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

சர்ச்சைக்கு மத்தியில், ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு இன்று ‘தேசிய மொழி’ டெல்லியில் சரளமாக இந்தியில் பேச உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். தாய்மொழியில் படிப்பவர்கள் மட்டுமே உலகம் முழுவதும் முன்னேறி வருகின்றனர் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், ”மொழி என்பது தொடர்புக்கு மட்டுமே. மொழியிலிருந்து அறிவு வராது. தாய்மொழியில் படிப்பவர்கள் மட்டுமே உலகம் முழுவதும் சிறந்து விளங்குகிறார்கள். தாய்மொழி மூலம் கற்றுக்கொள்வது எளிது. நான் இதை மிகத் தெளிவாகச் சொல்கிறேன்… எந்த மொழியும் வெறுப்புக்கானது அல்ல. ஆந்திரப் பிரதேசத்தில் தாய்மொழி தெலுங்கு. இந்தி தேசிய மொழி, சர்வதேச மொழி ஆங்கிலம்.

ஒரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதோ அல்லது அதை குருட்டுத்தனமாக எதிர்ப்பதோ, இரண்டும் இந்தியாவில் தேசிய, கலாச்சார ஒற்றுமை என்ற நமது நோக்கத்தை அடைய உதவாது. தேசிய கல்விக் கொள்கை 2020 -ல் இந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்பதால், அதன் செயல்படுத்தல் குறித்து தவறான வதந்திகளைப் பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி. மொழிகள் மீது தேவையற்ற அரசியல் தேவையில்லை. முடிந்தவரை பல மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்” என சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் சமீபத்தில், ”எந்தவொரு மொழியையும் வலுக்கட்டாயமாகத் திணிப்பதாலோ, கண்மூடித்தனமாக எதிர்ப்பதாலோ தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையை அடைய முடியாது” என்று கூறி இருந்தார். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பவன் கல்யாண், ”இந்தி மொழியை ஒருபோதும் எதிர்த்ததில்லை.

ஆனால், அதை கட்டாயமாக்குவதை மட்டுமே எதிர்த்தேன். தேசிய கல்விக் கொள்கை2020-ன் கீழ், மாணவர்கள் தங்கள் தாய்மொழி உட்பட ஏதேனும் இரண்டு இந்திய மொழிகளையும் ஒரு வெளிநாட்டு மொழியையும் கற்கும் வசதியைப் பெற்றுள்ளனர். அவர்கள் இந்தி படிக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி அல்லது இந்தியாவின் வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம்” என்று அவர் கூறியிருந்தார்.

Read Entire Article