ஹோலியை கொண்டாடுவது ‘குற்றம்’: ஷமியின் மகளை குறிவைத்த இஸ்லாமிய மதகுரு..!

21 hours ago
ARTICLE AD BOX

ரமலான் மாதத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நோன்பு நோற்காமல் பாவம் செய்ததாக குற்றம்சாட்டி இஸ்லாமிய மதகுரு, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மகளின் ஹோலி கொண்டாட்டங்களை சட்டவிரோதமானது என்றும் ஷரியத்துக்கு எதிரானது என்றும் விமர்சித்துள்ளார்.

சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி, “அவள் ஒரு சிறிய பெண்… அவள் அதைப் புரிந்து கொள்ளாமல் ஹோலி விளையாடினால், அது குற்றமல்ல. அவள் புத்திசாலித்தனமாக இருந்து இன்னும் ஹோலி விளையாடினால், அது ஷரியத்துக்கு எதிரானதாகக் கருதப்படும்” என்று அவர் கூறினார்.

ஷமிக்கு இஸ்லாத்தின் கொள்கைகளைப் பின்பற்றுமாறு முன்பே அறிவுறுத்தியதாக ரஸ்வி கூறினார். இருந்தும், அவரது மகள் ஹோலியைக் கொண்டாடுவது போன்ற ஒரு வீடியோ மௌலானா ஷஹாபுதீன் ரஸ்விக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

“ஷமியும், அவரது குடும்ப உறுப்பினர்களிடம் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்… ஷரியத்தில் இல்லாத எதையும், உங்கள் குழந்தைகளை அதைச் செய்ய விடாதீர்கள். ஹோலி இந்துக்களுக்கு மிகப் பெரிய பண்டிகை. ஆனால் முஸ்லிம்கள் ஹோலியைக் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும். ஷரியத்தை அறிந்த பிறகும் யாராவது ஹோலியைக் கொண்டாடினால், அது ஒரு குற்றம்” என்று அவர் கூறினார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் சமீபத்தில் வெற்றி பெற்றதற்காக இந்திய கிரிக்கெட் அணியையும் அவர் வாழ்த்தினார். “இந்திய அணியின் கேப்டன், அனைத்து வீரர்கள் மற்றும் முகமது ஷமி ஆகியோரின் வெற்றிக்கு என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், இஸ்லாமிய புனித மாதமான ரம்ஜானில் ஷமி நோன்பு நோற்காமல் இருந்ததன் மூலம் ஒரு பாவத்தைச் செய்ததாக ரஸ்வி கூறியிருந்தார். சனிக்கிழமை வீடியோ செய்தியில், ஷமி உட்பட நோன்பைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள் ரம்ஜானுக்குப் பிறகு அதைச் செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். ஷரியத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தனது குடும்ப உறுப்பினர்களை வலியுறுத்துமாறு ரஸ்வி ஷமிக்கு அறிவுறுத்தினார்.

மார்ச் 6 ஆம் தேதி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது ஷமி ஒரு பாட்டிலில் இருந்து கூல்டிரிங்க்ஸ் குடிப்பதை பார்த்து, மதகுரு, “ஷரியத்தின் பார்வையில், ஷமி ஒரு குற்றவாளி. அவர் இதைச் செய்திருக்கக் கூடாது” என்று கூறியிருந்தார். ஷரியத்தின் விதிகளைப் பின்பற்றவும் அவர் ஷரியத்தின் விதிகளை அவர் அறிவுறுத்தி இருந்தார்.

“ஷரியத்தின் விதிகளைப் பின்பற்றுவது அனைத்து முஸ்லிம்களின் பொறுப்பாகும். இஸ்லாத்தில் நோன்பு நோற்பது கட்டாயமாகும். ஒருவர் வேண்டுமென்றே நோன்பு நோற்கவில்லை என்றால், அவர் இஸ்லாமிய சட்டத்தின்படி பாவியாகக் கருதப்படுகிறார்,” என்று ரஸ்வி கூறியிருந்தார்.

“கிரிக்கெட் விளையாடுவது மோசமானதல்ல, ஆனால் முகமது ஷமி தனது மதப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஷரியத்தின் விதிகளைப் பின்பற்றவும், தனது மதத்திற்குப் பொறுப்பாக இருக்கவும் ஷமிக்கு நான் அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

Read Entire Article