ஹோலி கொண்டாட்டம்: பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னதால் தகராறு - ஒருவர் அடித்துக் கொலை

9 hours ago
ARTICLE AD BOX

மைஹார்,

மத்தியப்பிரதேசம் மாநிலம் மைஹார் மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது பாட்டு சத்தத்தைக் குறைக்க சொன்னதால் ஏற்பட்ட தகராறில் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராம்நகர் காவல்நிலையத்துக்குட்பட்ட மன்கிசார் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கேவாட். நேற்று முன்தினம் இரவு சங்கரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தீபு கேவாட் என்பவர் ஹோலி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சத்தமாக பாட்டு போட்டுள்ளார். சத்தமாக பாட்டு போட்டதால் சங்கரின் குழந்தைகளால் படிக்க முடியவில்லை.

இதையடுத்து சங்கர், தீபுவிடம் பாட்டு சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தீபுவும் அவரது உறவினர்கள் 5 பேரும் சேர்ந்து சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சங்கரின் தந்தை முன்னா கேவாட் (64 வயது) படுகாயமடைந்தார்.

தரையில் சரிந்து விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னா கேவாட் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தீபு மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.


Read Entire Article