ஹோட்டல் ஸ்டைலில் பூரிக் கிழங்கு செய்யத் தெரியுமா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்கள்!

22 hours ago
ARTICLE AD BOX

தேவையான பொருள்கள்

ஒரு கப் கோதுமை மாவு  

அரை கப் மைதா மாவு 

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய் 

மசாலா செய்ய

3 உருளைக்கிழங்கு

ஒரு பெரிய வெங்காயம்

3 பச்சை மிளகாய்

ஒரு துண்டு இஞ்சி 

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் 

தேவையான அளவு உப்பு 

2 டீஸ்பூன் மைதா மாவு 

சிறிதளவு கொத்தமல்லி தழை

கால் டீஸ்பூன்  கடுகு 

அரை டீஸ்பூன் கடலை பருப்பு

சிறிதளவு கறிவேப்பிலை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இதில் சூடான நீரை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இது அரை மணி நேரம் ஊற வேண்டும்.   ஈர துணி போட்டு மூடி வைத்தால், மாவு காயாமல் இருக்கும். பின்னர் ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அதை வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்த பூரி மாவை எண்ணெயில் மெதுவாக விடவும். பூரி மேலெழும்பும் போது மெதுவாக கரண்டியால் அழுத்தினால் பூரி நன்கு உப்பி வரும். பின்னர் பூரியை மெதுவாக திருப்பி அடுத்த பக்கம் சிவந்ததும் எடுக்கவும்.எண்ணெய் வடிந்த பின்னர் பரிமாறவும். சுவையான பூரி தயார். 

உருளைக்கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் போட்டு, உருளைக்கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, 6 - 8 நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்து வேக விடவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, கடலைபருப்பு போட்டு தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, மஞ்சள்தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை கரண்டியால் மசித்து சேர்க்கவும். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி மைதா மாவை தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து, உருளைக்கிழங்கு மசாலாவில் சேர்க்கவும்.  பின்னர் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை நிறுத்தி விடவும். சுவையான, சுலபமாக செய்யக்கூடிய பூரி கிழங்கு தயார். இவை இரண்டும் தனித்துவமான ஹோட்டல் சுவையில் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் வீட்டிலே ட்ரை செய்து பாருங்கள். 

 

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, 2019 ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஆங்கில இலக்கியத் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேல் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். இவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், லைப்ஸ்டைல், சினிமா மற்றும் உலகம் தொடர்பான செய்திகளில் தனது பங்களிப்பை அளித்து வருக்கிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
Read Entire Article