ஹோட்டலில் தனி அறை! மற்ற மதத்தினருக்கு தடை! முகமது ரிஸ்வான் செயல்கள் குறித்து பேசிய சக வீரர்!

2 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குருப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இந்த பிரிவில் உள்ள போட்டியை நடத்தும் பாகிஸ்தான் 2 படுதோல்வி அடைந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரை விட்டு வெளியேறி விட்டது. அந்த அணி நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்திலும், இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது.

ஐசிசி தொடர்களில் மற்றொருமுறை மோசமான தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியை அந்த நாட்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையே கூண்டோடு கலைக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்கள் இடையே ஒற்றுமை இல்லாததே தோல்விக்கு காரணம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையில் உள்ளதாகவும், அவர்களுக்கிடையே புரிதல் இல்லையெனவும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லாததையும், பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வானின் மத அணுகுமுறையையும் சக வீரர் இமாம் உல் ஹக் வெளிப்படுத்தியுள்ளார்.

'இந்தியா ஒரே பிட்ச்சில் விளையாடுகிறது'; தோல்விக்கு சாக்குப்போக்கு கண்டுபிடித்த பாகிஸ்தான்!

அதாவது பாகிஸ்தான் இமாம் உல் ஹக் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் மைதானத்திற்கு வெளியே, பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் அணியில் உள்ள தனக்கு பிடித்த மூத்த வீரர்களை குறித்து இமாமிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ''அணியில் உள்ள அனைத்து மூத்த வீரர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள். யாரை நான் தேர்வு செய்வது?'' என்று தெரிவித்தார். 

இதேபோல் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானின் அணியை வழிநடத்தும் அணுகுமுறை குறித்து பேசிய இமாம் உல் ஹக், அணி எங்கு பயணிக்கிறதோ அங்குள்ள ஹோட்டல்களில் ரிஸ்வான் தொழுகை செய்ய அறை ஏற்பாடு செய்கிறார் என்றும், அணியில் உள்ள இந்துக்கள் அல்லது 'முஸ்லிம் அல்லாதவர்கள்' இந்த அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவிவித்தார்.

'' ரிஸி (முகமது ரிஸ்வான்) ஹோட்டல்களில் அறைகளை ஏற்பாடு செய்கிறார். வீரர்கள் அனைவரையும் தொழுகைக்கு ஒன்று சேர்ப்பார். பிரார்த்தனைக்காக வெள்ளைத் தாள்களை விரிப்பார். முஸ்லிம் அல்லாதவர்கள் அந்த அறைக்குள் உள்ளே நுழைவதைத் தடுக்கிறார். தொழுகை நேரங்களுக்காக அவர் வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்குகிறார்'' என்று இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இமாம் உல் ஹக் பேசிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

IND vs NZ: ரோகித் சர்மா அவுட்! கேப்டனாகும் சுப்மன் கில்! இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!

Read Entire Article