ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் மூத்த நிர்வாகிகள் ராஜினாமா!. பங்குகள் பெருமளவில் வீழ்ச்சி!.

3 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் மூத்த நிர்வாகிகள் ராஜினாமா!. பங்குகள் பெருமளவில் வீழ்ச்சி!.

News

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பல்வேறு மேலாண்மை மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. சமீபத்திய தகவலின்படி, முக்கிய senior executives பதவியில் உள்ளவர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நிறுவனத்தின் மேலாண்மை கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது, கடந்த சில நாட்களில் கிட்டத்தட்ட அரை டஜன் உயர் பதவிகளில் உள்ளவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், வரும் வாரங்களில் மேலும் பலர் பதவி விலகவுள்ளதாகவும் The Economic Times செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகவல் குறித்து நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ பதில் இதுவரை வெளிவரவில்லை.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் மூத்த நிர்வாகிகள் ராஜினாமா!. பங்குகள் பெருமளவில் வீழ்ச்சி!.

உயர்பதவிகளில் உள்ளவர்கள் ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் கிட்டத்தட்ட 1% சரிந்து ரூ.3,527.85 ஆகக் குறைந்தது. அந்தவகையில், கடந்த ஐந்து நாட்களில், 3% பங்குகள் குறைந்துள்ளது, அதே நேரத்தில் கடந்த ஆறு மாதங்களில் 41% சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் இருந்து முக்கியமான தலைவர்களும் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜினாமா செய்த முக்கிய நிர்வாகிகள்: 1. ரீமா ஜெயின்-தலைமை தகவல் மற்றும் டிஜிட்டல் அதிகாரி, நிர்வாக மேலாண்மை குழுவின் உறுப்பினர்(Chief Information and Digital Officer, and member of the executive management team).

2.சமீர் பாண்டேர்-திறமை மேலாண்மைக்கான மனிதவளத் தலைவர்(HR Head for Talent Management).

3.ஸ்வதேஷ் ஸ்ரீவஸ்தவா - Chief Business Officer, Emerging Mobility (Vida), and Chair of the Innovation Council

4.தர்ம ரக்ஷித் - மனிதவள மற்றும் கலாச்சார மாற்றம் தலைவர்(Head of HR and Culture Change)

5.சந்திரசேகர் ராதாகிருஷ்ணன் - Head of Business, Emerging Mobility (Vida) ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் அனைவரும், தலைமை நிர்வாக அதிகாரி நிரஞ்சன் குப்தா மற்றும் தலைமை வணிக அதிகாரி ரஞ்சிவ்ஜித் சிங் ஆகியோர் பிப்ரவரியில் பதவி விலகியதையடுத்து, ராஜினாமா செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும், ராஜினாமா செய்த இந்த நிர்வாகிகளில் சிலர் குப்தா மற்றும் ரஞ்சிவ்ஜித் சிங் ஆகியோரால் பணியமர்த்தப்பட்டதாகவும், இதுவே அவர்கள் ராஜினாமா செய்வதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Take a Poll

அதாவது கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற நிறுவன அளவிலான டவுன் ஹால் கூட்டத்தில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பவன் முன்ஜால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுமார் 5,000 ஊழியர்களிடையே உரையாற்றிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், உங்கள் ஒவ்வொருவரையும் நான் கவனித்து கொண்டிருக்கிறேன்," என்று பவன் முன்ஜால் பேசியதாகவும், இது குறைவான செயல்திறன் கொண்டவர்களை நிறுவனம் பொறுத்துக்கொள்ளாது என்பதை அவர் சமிக்கை மூலம் தெரிவித்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேலாண்மை மாற்றங்கள், அது அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொண்டு வரும் நேரத்தில் நடைபெற்று வருகின்றன. இப்படியிருக்கையில், கடந்த மாத மொத்த விற்பனையில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா, நாட்டின் நம்பர் 1 இரு சக்கர வாகன விற்பனையாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை முந்தி, இந்தியாவின் முதன்மை இருசக்கர வாகன விற்பனையாளர் என்ற இடத்தை பிடித்தது. மேலும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஏற்றுமதி மற்றும் மின்சார வாகனங்களை சேர்த்துக் கொண்டு மொத்த இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை முந்தியுள்ளது. இதனால், ஹீரோ மோட்டோகார்ப் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதத்திற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மொத்த விற்பனை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 17% குறைந்துள்ளது. நிறுவனம் இப்போது சந்தைப் பங்கு குறைந்து வருவது, கடுமையாகும் போட்டிகள் மற்றும் உள் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

FAQ's
  • மூத்த நிர்வாகிகள் ஏன் பதவி விலகினர்?

    இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பல்வேறு மேலாண்மை மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் மூத்த நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்துள்ளனர்.

  • ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் எவ்வளவு வீழ்ச்சி?

    உயர்பதவிகளில் உள்ளவர்கள் ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் கிட்டத்தட்ட 1% சரிந்து ரூ.3,527.85 ஆகக் குறைந்தது. அந்தவகையில், கடந்த ஐந்து நாட்களில், 3% பங்குகள் குறைந்துள்ளது,

     

  • நாட்டின் நம்பர் 1 இரு சக்கர வாகன விற்பனையாளராக எந்த நிறுவனம் உள்ளது?

    கடந்த மாத மொத்த விற்பனையில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா, நாட்டின் நம்பர் 1 இரு சக்கர வாகன விற்பனையாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை முந்தி, இந்தியாவின் முதன்மை இருசக்கர வாகன விற்பனையாளர் என்ற இடத்தை பிடித்தது.

  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எந்த இடத்தில் உள்ளது?.

    டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஏற்றுமதி மற்றும் மின்சார வாகனங்களை சேர்த்துக் கொண்டு மொத்த இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை முந்தியுள்ளது. இதனால், ஹீரோ மோட்டோகார்ப் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Read Entire Article