ARTICLE AD BOX
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.42 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுந்தர்நகர் பகுதியில் உள்ள கியார்கி அருகே 7 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மண்டி மாவட்டம் நில அதிர்வு மண்டலம் 5-ன் கீழ் வருகிறது. இது அதிக சேத அபாய மண்டலமாகும்.
கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!
மாவட்டத்தின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டாலும், உயிர் மற்றும் பொருள் சேதம் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த 17ஆம தேதி தில்லி, பிகாரைத் தொடர்ந்து ஒடிஸாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.