ஹிந்தி- தமிழர்கள் பிரச்னை: பவன் கல்யாணுக்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

3 hours ago
ARTICLE AD BOX

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்து பேசியுள்ளார்.

ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழர்களை சீண்டும் விதமாக ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

”ஹிந்தியை தென்னிந்தியாவில் திணிக்கிறார்கள் என்கிறார்கள். எல்லாம் தேசிய மொழிதானே. தமிழ்நாட்டில் ஹிந்தி வரக்கூடாது என்கிறார்கள்.

அப்போது எனக்கு தோன்றியது என்னவென்றால் ஹிந்தி மட்டும் வேண்டாம் என்கிறார்கள் பிறகு ஏன் தமிழ்ப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்கிறீர்கள்?” என பவன் கல்யான் பேசியது தமிழகத்தி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பதிவில் அவரது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

’ஹிந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள்’ என்பது மற்ற மொழியை வெறுப்பதற்காக அல்ல. அது எங்களது தாய்மொழியை பெருமையுடன் பாதுகாப்பதாகும். தயவுசெய்து இதை யாராவது பவன் கல்யாணுக்கு தெரிவியுங்கள் எனக் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அரசியல் குறித்து பல்வேறு பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டு வரும் பிரகாஷ் ராஜ் தற்போது தமிழர்களுக்காக பேசியது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடைசியாக தமிழில் ராயன் படத்தில் நடித்திருந்தார். மீண்டும் தனுஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தற்போது ஜன நாயகன், ரெட்ரோ படங்களில் நடித்துள்ளார். மேலும் சில தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

Read Entire Article