ARTICLE AD BOX

Actor Vishal: அப்பா தயாரிப்பாளர் என்பதால் சுலபமாகவே நடிகரானவர் விஷால். திமிறு, சண்டக்கோழி போன்ற திரைப்படங்களின் வெற்றி விஷாலை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது. ஆனால், தனது வெற்றியை தக்க வைத்து கொள்ளத் தெரியாத நடிகராகவே விஷால் இருக்கிறார்.
தொடர் தோல்வி: அதனால்தான் தொடர் ஹிட்டுக்களை கொடுக்காத ஒரு நடிகராக அவர் இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்த 10க்கும் மேற்பட்ட திரைப்படம் ஓடவில்லை. ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் நடித்த மார்க் ஆண்டனி படம் மட்டுமே ஓடியது. அதற்கும் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

விஷாலின் உடல்நிலை பாதிப்பு: ஒருபக்கம் விஷாலின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதனால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டும், வீட்டை உள்ளுக்குள் பூட்டிகொண்டும் தொடர்ந்து 3 நாட்கள் எல்லாம் தூங்கிக்கொண்டே இருப்பாராம். எனவே, அவரை யாராலும் தொடர்புகொள்ள முடியாத நிலையே இருந்திருக்கிறது.
மதகஜராஜா: அந்த சமயத்தில்தான் 12 வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சியின் இயக்கத்தில் விஷால் நடித்து உருவான மதகஜராஜா திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் விழாவில் விஷால் கலந்து கொண்டபோது மைக்கை கூட சரியாக பிடிக்க முடியாமல் விஷாலின் கைகள் நடுங்கியது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி எல்லோரும் ‘விஷாலுக்கு என்னாச்சி?’ என விசாரிக்க துவங்கிவிட்டனர். ஆனால், எனக்கும் ஒன்றும் ஆகவில்லை. நன்றாக இருக்கிறேன் என வீடியோ போட்டார் விஷால்.

சுந்தர் சியுடன் அடுத்த படம்: மேலும், மதகஜராஜா படத்தின் சூப்பர் ஹிட் அவருக்கு உற்சாகத்தை கொடுக்க சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஷாலும் முடிவெடுத்தார். சுந்தர்.சியும் அதற்கு தயாராகவே இருந்தார். ஏனெனில், அவர் அடுத்து எடுக்க திட்டமிட்டிருந்த மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு நயன்தாரா கால்ஷீட் கொடுக்காமல் இருந்தார். எனவே, அந்த படம் துவங்குவதற்கு முன் விஷால் படத்தை முடித்துவிடலாம் எனவும் முடிவு செய்திருந்தார்.
ஆனால், சம்பள விஷயத்தில் விஷால் கறார் காட்டியதால் அந்த படம் நகரவில்லை. ஒருபக்கம் நயன்தாராவும் கால்ஷீட் தேதிகளை கொடுத்துவிட்டதால் மூக்குத்தி அம்மன் 2 பட வேலைகளை துவங்கிவிட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. ஜுன் மாதம் வரை இந்த பட வேலைகளை சுந்தர் சி பார்க்கவுள்ளார்.
ஒரு ஹிட் கிடைத்திருக்கும்போது சம்பளத்தில் கறார் காட்டாமல் சுந்தர்.சி போன்ற இயக்குனருடன் நடித்து ஹிட் கொடுத்து தனது மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்ளவே விஷால் முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் கோட்டை விட்டிருக்கிறார். மறுபடி எப்போது அவருக்கு ஹிட் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.