ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்படும் ராஷி கன்னா

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் ராஷி கன்னா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பாா், திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

பேன்டஸி-ஹாரர் ஜானரில் தற்போது பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‛அகத்தியா' படத்தில் ராஷி கன்னா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வரும் 28ம் தேதி பான் இந்திய அளவில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் பா விஜய், நடிகர் ஜீவா, நடிகை ராஷி கன்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ராஷி கன்னா, ‛‛நான் ஏற்கனவே தமிழில் அரண்மனை 3 மற்றும் 4 ஆகிய படங்களில் நடித்துள்ளேன். ஹாரர் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் இந்த படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம். அனைவரும் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும்'' என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், எப்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ராஷி கண்ணா, ‛அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வந்தால் நிச்சயமாக நடிப்பேன். அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்'என்றார்.

Read Entire Article