ARTICLE AD BOX
ஹமாஸ் போராளிகளுக்கு இஸ்ரேலிய பிணைக்கைதி முத்தம் கொடுத்தது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இச்செயலுக்கு இஸ்ரேலிய மக்கள் மத்தியில் பாராட்டும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
ஓமர் வென்கெர்ட், ஓமர் ஷெம் டோவ் மற்றும் எலியா கோஹன் ஆகிய மூன்று பிணைக் கைதிகளையும் ஹமாஸ் உறுப்பினர்கள் நுசீராட் நகரில் மேடையில் அணிவகுத்து அழைத்துச் சென்றனர். அப்போது ஓமர் ஷெம் டோவ், மேடையில் கையசைத்து விட்டு இரண்டு ஹமாஸ் உறுப்பினர்களின் நெற்றியில் முத்தமிட்ட சம்பவம் தான் உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது. ஓமர் ஷெம் டோவின் தந்தை, தனது மகனின் செயல், அவருடைய தனித்துவமான ஆளுமையை பிரதிபலிக்கிறது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ஓமரின் செயலை இஸ்ரேலிய மக்கள் பலரும் பாராட்டியும் எதிர்த்தும் வருகின்றனர். காசாவில் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதி ஒரு எதிர் உறுப்பினரின் நெற்றியில் முத்தமிட்டது நெதன்யாகுவிற்கு மாரடைப்பை உண்டாக்கும் என ஒரு இஸ்ரேலியர் கூறியுள்ளார். மற்றொருவரோ, நம்மை கொன்றவர்களுக்கு முத்தம் அவசியமா என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.