ஸ்வீட்ஹார்ட் - திரை விமர்சனம்

13 hours ago
ARTICLE AD BOX

Published : 16 Mar 2025 08:47 AM
Last Updated : 16 Mar 2025 08:47 AM

ஸ்வீட்ஹார்ட் - திரை விமர்சனம்

<?php // } ?>

பெற்​றோரின் பிரி​வால், திரு​மணம், குடும்​பம் என்​ப​தில் நம்​பிக்கை இல்​லாதவ​னாக இருக்​கிறான் வாசு (ரியோ ராஜ்). அப்​பா​வும் தாத்​தா​வும் ஆணா​திக்​க​வா​தி​களாக இருந்​தா​லும் குடும்ப அமைப்​பின் நன்​மையை உணர்ந்து வளர்ந்​தவள் மனோ (கோபிகா ரமேஷ்). காதலில் விழும் இரு​வரும் பின்​னர் ‘பிரேக்​-அப்’ என்று பேசிப் பிரிய, அடுத்த சில நாள்​களில் மனோ கர்ப்​ப​மாக இருப்​பது உறு​தி​யாகிறது. அதைக் கலைத்​து​விட வற்​புறுத்​துகிறான் வாசு. அதற்கு மனோ ஒப்​புக்​கொண்​டாளா, இல்​லையா என்​பது கதை.

ஓர் அறி​முக இயக்​குநர் தன்​னுடைய முதல் படைப்​பைச் சமூகத்​தின் மேன்​மைக்​காகக் கொடுக்க வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருந்து அதற்​காகப் போராடி உரு​வாக்​கு​வது தமிழ் சினி​மா​வில் அபூர்​வ​மாக நிகழும் சம்​பவம். அப்​படியொரு சம்​பவத்​தைச் செய்​திருக்​கிறார் ஸ்வினீத் எஸ். சுகு​மார்.

புத்​தா​யிரத் தலை​முறை​யின் காதலில் மலிந்​திருக்​கும் அகச்​சிக்​கல், குடும்​பம், குழந்தை என்ற பொறுப்​புணர்​வைத் தட்​டிக் கழிக்​கும் மனோ​பாவம், திரு​மணத்​துக்கு முந்​தைய பாலுறவு, அதனால் நேரும் கர்ப்​பத்​தைக் கையாளும் அணுகு​முறை என கதா​பாத்​திரங்​களின் வாழ்க்​கை​யில் நிகழும் சம்​பவங்​கள் வழி​யாக நம்​முடன் ஆழமாக உரை​யாடு​கிறது படம். முக்​கிய​மாகக் கருக்​கலைப்​புக்கு எதி​ரான மனநிலையை உரு​வாக்​கு​வ​தில் முழு​மை​யான வெற்​றியைப் பெற்​று​விடு​கிறது. கருக்​கலைப்பு என்​பது, பெண்​ணுக்கு உடல், மன ரீதி​யாக வலிகளைக் கொடுக்​கும் பெரும் தண்​டனை​யாக மாறி, உயிருக்கே உலை வைக்​கும் ஒன்​றாக​வும் மாறி​விடலாம் என்​பதை நெத்​தி​யடி​யாகக் கடத்​துகிறது படம்.

பிரிந்​து​விடு​வது என்​கிற பிரேக் - அப் சண்​டையி​லிருந்து தொடங்​கும் படம், வாசு - மனோ​வின் காதல் எத்​தகையது, அவர்​கள் எப்​படிப்​பட்ட குடும்​பப் பின்​னணி​யைச் சேர்ந்​தவர்​கள், எதற்​காகப் பிரிந்​தார்​கள், எத்​தகைய சூழலில் தவறு செய்​தார்​கள், இறு​தி​யில் அவர்​கள் என்ன முடி​வெடுத்​தார்​கள் என்​ப​தைக் கூறும் விறு​விறுப்​பான ‘நான்-லீனியர்’ திரைக்​கதை ஈர்க்​கிறது.

வாசு, மனோ​வாக நடித்​தவர்​களும் வாசு​வின் நண்​பனும் காதலர்​களின் குடும்​பத்​தின​ராக வருபவர்​களும் தரமான நடிப்​பைத் தந்​திருக்​கிறார்​கள். இது​போன்ற படத்​தைத் தயாரித்​ததற்​காக யுவன் சங்​கர் ராஜாவை எவ்​வளவு வேண்​டு​மா​னாலும் பாராட்​டலாம்; ஆனால், அவரின் இசை, படத்​துக்கு எந்த நன்​மை​யும் செய்​ய​வில்​லை. ‘நான் - லீனியர்’ கதை சொல்​லலைக் குழப்​பம் இல்​லாத வகை​யில் தனது படத் தொகுப்​பின் மூலம் செம்மை செய்​திருக்​கிறார் எடிட்​டர் தமிழரசன். இந்​தப் படத்​தைக் காதலிப்​பவர்​களும், காதலித்​தவர்​களும் காதலிக்​கப் போகிறவர்​களும்​ காண்​ப​தன்​ மூலம்​, ‘உயிரின் ஓசை’ உணர முடியும்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article