ஸ்ரீலீலா நடித்துள்ள 'ராபின்ஹுட்' படத்தின் டிரெய்லர் அப்டேட்

1 day ago
ARTICLE AD BOX

சென்னை,

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் 'ஒன் மோர் டைம்' மற்றும் 'வாட்டெவர் யூ கோ' என்ற பாடல்கள் சமீபத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தின் 3-வது பாடலான 'அதிதா சர்ப்ரைஸ்' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த சிறப்பு பாடலுக்கு பிரபல நடிகை கெட்டிகா ஷர்மா நடனமாடியுள்ளார்.

இந்த நிலையில், மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, டிரெய்லர் வருகிற 21-ந் தேதி மாலை 04.05 மணிக்கு வெளியாக உள்ளது.

Hello Grok! Nice talking to you.#RobinhoodTrailer on March 21st at 4.05 PM #Robinhood GRAND RELEASE WORLDWIDE ON MARCH 28th. pic.twitter.com/Mq5GEVOxig

— nithiin (@actor_nithiin) March 17, 2025

Read Entire Article