ஷாருக்கானின் 'பதான் 2' படத்தின் படப்பிடிப்பு 2026 இல் தொடங்குகிறது

3 hours ago
ARTICLE AD BOX
'பதான் 2' படத்தின் படப்பிடிப்பு 2026 இல் தொடங்குகிறது

ஷாருக்கானின் 'பதான் 2' படத்தின் படப்பிடிப்பு 2026 இல் தொடங்குகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2025
07:20 pm

செய்தி முன்னோட்டம்

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான 'பதான்' படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஆம் பாகம் வரும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரைக்கு வரவுள்ளது.

தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா நீண்ட தேடலுக்கு பிறகு பதான் 2 படத்தின் ஸ்கிரிப்டை இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

"ஆதித்யா, 2023ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பதான் 2 க்கான ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறார் " என்று பீப்பிங் மூனிடம் ஒரு வட்டாரம் தெரிவித்தது.

ஸ்கிரிப்ட் விவரங்கள்

'பதான் 2' ஸ்கிரிப்ட் அதிக அளவு தீவிரத்தை உறுதியளிக்கிறது

பதான் 2 படத்தின் ஸ்கிரிப்ட் பதானின் கதையின் தொடர்ச்சி மட்டுமல்ல, யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் எதிர்கால மோதல்களுக்கான அடித்தளத்தையும் அமைக்கிறது என்று அந்த வட்டாரம் மேலும் வெளிப்படுத்தியது.

விரிவான திட்டமிடல் மற்றும் சிக்கலான கதைசொல்லல் காரணமாக திரைக்கதை எழுதும் செயல்முறை நீண்ட நேரம் எடுத்தது.

ஆதித்யா சோப்ரா, ஸ்ரீதர் ராகவன் மற்றும் அப்பாஸ் டைர்வாலா ஆகியோர் ஒரு அற்புதமான, கவர்ச்சிகரமான ஸ்கிரிப்டை வடிவமைத்துள்ளனர்.

இது அளவு மற்றும் தீவிரத்தின் அடிப்படையில் முதல் பாகத்தை விஞ்சும் என்று கூறப்படுகிறது.

இயக்கம்

'பதான் 2' படத்திற்கான இயக்குனர் மாற்றம்

ஷாருக்கானிடம் இந்த ஸ்கிரிப்ட் பற்றி ஆலோசிக்கப்பட்டது என்றும் அவர் இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும், முதல் பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த், இரண்டாம் பாகத்தை இயக்கமாட்டார் எனக்கூறப்படுகிறது.

பதான் 2 படத்தில் ஷாருக்கானின் உளவாளி கதாபாத்திரத்திற்கு ஒரு புதிய தோற்றத்தை அளிக்க தயாரிப்பாளர் சோப்ரா இப்போது ஒரு புதிய இயக்குனரைத் தேடி வருகிறார்.

கிங் படத்தை முடித்த பிறகு ஷாருக்கான் இந்த படத்திற்கான படப்பிடிப்பை 2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்குவது போல ஏற்பாடுகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது.

ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார், பதான் மற்றும் டைகர் 3 போன்ற படங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ள YRF ஸ்பை யுனிவர்ஸில் பதான் 2 எட்டாவது படமாக இருக்கும் .

Read Entire Article