வேளாண்மையில் செய்யறிவு.. பில் கேட்ஸை சந்தித்தார் முதல்வர் ஃபட்னவீஸ்

9 hours ago
ARTICLE AD BOX

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று சந்தித்துப் பேசினார்.

மும்பையில் `சஹ்யாத்ரி' அரசு விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக முதல்வர் அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின்போது செய்யறிவின் (AI) சாத்தியமான பயன்பாடுகள் குறித்து விவாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சுகாதாரம், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஏஐயின் சாத்தியமான பயன்பாடுகள் குறித்தும் இருவரும் விவாதித்ததாகத் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது பில்கேட்ஸ் அறக்கட்டளையின் மூத்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

முன்னதாக தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பிற மத்திய அமைச்சர்களை பில்கேட்ஸ் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article