வேளச்சேரியில் எதற்கு புதிய பாலம்.. கார்களை நிறுத்துவதற்கா? பட்ஜெட்டால் கொந்தளித்த தமிழிசை!

3 hours ago
ARTICLE AD BOX

வேளச்சேரியில் எதற்கு புதிய பாலம்.. கார்களை நிறுத்துவதற்கா? பட்ஜெட்டால் கொந்தளித்த தமிழிசை!

Chennai
oi-Yogeshwaran Moorthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை, மீண்டும் லேப்டாப் திட்டம் கொண்டு வரப்பட்டது, டைடல் பார்க், தொழிற்பூங்கா என்று பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் எதிர்க்கட்சிகளிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டம், மாதாந்திர மின் கட்டண முறை, சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்று ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தலித் மாணவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு வருகின்றனர். வேங்கைவயல் பிரச்சனையில் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

tamil nadu budget 2025 tamil nadu budget Tamilisai Soundararajan 2025

தமிழ்நாட்டிலேயே அவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கிறார்கள். பிரதமர் தமிழ்நாட்டை மட்டும் ஆளவில்லை. மொத்த இந்தியாவையும் ஆட்சி செய்கிறார். இன்று பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வேளச்சேரியில் ரூ.300 கோடிக்கு பாலம் கட்டவுள்ளார்களாம். எதற்காக வேளச்சேரியில் மீண்டும் பாலம் கட்டப்படுகிறது?

எல்லோரும் சென்று கார் நிறுத்துவதற்கா? ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு மழை நீர் வடிவால் பணிகளே முழுமையாக செய்யவில்லை. இந்த சூழலில் இன்னொரு பாலம் கட்டப்போகிறார்களாம்.. அது பார்க்கிங் பாலமாக மாறப் போகிறது. தமிழ்நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளே இல்லை. புதிய திட்டங்களே எதுவும் இல்லை. இதனிடையே 100 இடங்களில் லைவ் ரிளே வேறு செய்கிறார்கள்.

திமுக அமைச்சர்களின் வாய் எவ்வளவு அழகாக பேசுகிறது. அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சருக்கு நாவடக்கம் தேவை என்று சொல்கிறார். தர்மேந்திர பிரதான் அவர் பேசிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொண்டார். இருந்தாலும் தொடர்ந்து விமர்சிக்கிறார்கள். ஆர்.எஸ்.பாரதி சினிமா பொறுக்கிகள் என்று சொல்கிறார். முதலமைச்சரை சொல்கிறார்களா அல்லது கருணாநிதியை சொல்கிறார்களா?

அதனால் திமுகவினர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்திருந்தால், வேறு மாதிரி முடிவு எடுத்திருப்பார். மத்திய அரசு கொடுக்க தயாராக இருக்கும் போது, மீண்டும் கடன் வாங்கி கடன் வாங்கி மக்கள் தலையில் சுமையை தள்ளுகிறார்கள். ஏற்கனவே ரூ.8 லட்சம் கோடிக்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். இது திமுக அரசின் தோல்வியடைந்த நிர்வாகம் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
English summary
DMK Government is Failed in Administration and Budget is just a waste Paper says BJP Former State President Tamilisai Soundararajan
Read Entire Article