ARTICLE AD BOX
Rs 3 Lakhs For Youth: தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai), ஒடிசாவில் சுபத்ரா திட்டம் (Subhadra Scheme) முதல் தற்போது டெல்லியில் மகிளா சம்ரித்தி யோஜனா (Mahila Samridhi Yojana) திட்டம் ஆகியவை பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
Rs 3 Lakhs For Youth: வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க...
அதேபோல், பெண்களுக்கு மட்டுமின்றி இளைஞர் நலன் சார்ந்தும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தெலங்கானாவில் வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திட்டத்தில் வேலையில்லாத மாணவர்கள் லட்சக்கணக்கில் ஊக்கத்தொகை பெறுவார்கள் என கூறப்படுகிறது.
Rs 3 Lakhs For Youth: சுய தொழில் தொடங்க ஊக்கத்தொகை
வேலையில்லாத இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான தெலங்கானா அரசு ராஜிவ் யுவா விகாசம் (Rajiv Yuva Vikasam) திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்திட்டத்தின் கீழ் பட்டியல் சமூகம், பட்டியல் பழங்குடியினம், பிற்படுத்தப்பட்டோர் மற்ரும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சமூகங்களின் வேலையின்றி இருக்கும் இளைஞர்களை தேர்வு செய்து அவர்கள் சுய தொழில் தொடங்க ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
Rs 3 Lakhs For Youth: 5 லட்ச இளைஞர்களுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை
இந்த திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த சுமார் 5 லட்சம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்த திட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்து இளைஞர்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஊக்கத்தொகை அளிக்க வழிவகை செய்யப்படும் என கூறப்படுகிறது.
Rs 3 Lakhs For Youth: விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
இருப்பினும் இந்த திட்டம் குறித்து அரசு தரப்பில் மேலும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் 15ஆம் தேதி முதல் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப். 5ஆம் தேதிவரை இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்க காலகெடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மே 31ஆம் தேதிக்குள் திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்யும் நடைமுறை நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. வரும் ஜூன் 2ஆம் தேதி தெலங்கானா உதய நாள் கொண்டாடப்படும் வேளையில் அன்று தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Rs 3 Lakhs For Youth: துணை முதல்வர் உறுதி
இதுகுறித்து தெலங்கானாவின் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான பட்டி விக்ரமார்கா,"காங்கிரஸ் அரசு இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது. வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு கொண்டசெல்வதற்கு வாய்ப்பு வழங்குகிறது.
இந்த திட்டம் பல அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும். விரைவில் இத்திட்டம் குறித்த குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். அடிமட்ட அளவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதில் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக ஈடுபடுவார்கள்" என்றார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் தெலங்கானாவில் வேலைவாய்ப்பை உருவாக்காமலும், இளைஞர்களை புறக்கணித்தும் முந்தைய பிஆர்எஸ் கட்சி ஆட்சி செய்தது என்றும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. பெண்களுக்கு சிறப்பு சலுகை.. வந்தது புதிய விதி
மேலும் படிக்க | பூக்களின் ஹோலி... பல்கலைக்கழக வளாகத்தில் பதஞ்சலி குடும்பத்தினர் ஹோலி கொண்டாட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ