ARTICLE AD BOX
உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு எவ்வளவு அவசியமே அந்த அளவிற்கு, உடலில் தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதும் அவசியம் தான். உடலில் ஒவ்வொரு பாகத்திற்கும் ஆரோக்கியம் தேவை என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில், தற்போது எலும்பு ஆரோக்கியத்திற்கு என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து, டாக்டர் உஷா நந்தினி கூறியுள்ளார்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில், ஒரு பிடி வெள்ளை எள்ளு சாப்பிட்டு விட்டு தண்ணீர் (வெந்நீர்) குடித்து வந்தால் எலும்புகள் வலுவாக இருக்கும். அதேபோல் எலும்பு தேய்மானம் படிப்படியாக குறையும். காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, ஒரு பீஸ் தேங்காய் சாப்பிட்டாலும் எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களில் இருந்து தப்பிக்கலாம். இந்த தேங்காயை துருவலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
கால்சியம் மெக்னீசியம், ஜிங்க் இவை 3-ம் தான் எலும்பு வளர்ச்சி மற்றும் உருவாக்கத்திற்கு தேவையான, முக்கியமான கனிம பொருளாக இருக்கிறது. இந்த 3 சத்துக்களும் இருக்கும் உணவு பொருட்களில், வெள்ளை எள்ளு மற்றும் தேங்காய்க்கு முக்கிய இடம் உண்டு. தினமும் அரை ஸ்பூன் வெள்ளை எள்ளு சாப்பிடலாம். அதேபோல் கருவேப்பிலை ஒரு கொத்து எடுத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தாலே போதுமானது. எலும்பு தேய்மானம் படிப்படியாக குறைய தொடங்கும்.
அடுத்து பாதாம் பால் நாம் வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாம். காலையில், 7-8 பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து மாலையில், அதை மிக்சியில் அறைத்து பால் செய்து சாப்பிடலாம். பாதாம் பருப்பு அரைத்த கலவையில், வெதுவெதுப்பான பால் சேர்த்து இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டும். இதனுடன் சுக்குப்பொடி சேர்த்து குடித்தால், எலும்பு இணைப்புகளில் ஏற்படும் தேய்மானம் குறையும் எலும்பு ஆரோக்கியம் மேம்படும் என்று கூறியுள்ளார்.