வெள்ளிங்கிரி மலையில் தவெக கொடி!

2 days ago
ARTICLE AD BOX

கோவை: வெள்ளிங்கிரி மலை மீது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை வெள்ளிங்கிரி மலையில் பக்தர்கள் மூன்று மணி நேரம் நடந்து சென்று இறைவனை வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில் தவெக கட்சித் தொண்டர் ஒருவர் வெள்ளிங்கிரி ஏழாவது மலை மீது தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு வந்துள்ளார்.

தற்போது, இது தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: இந்திய பங்குச் சந்தையில் ஒரு லட்சம் கோடி டாலர் நஷ்டம்! லாபத்தில் சீனா!

இதுகுறித்து ஆலாந்துறை போலீஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளிங்கிரி மலை மேல் தவெக கொடியை பறக்கவிட்டது யார்? யார் சென்றார்கள்? எப்போது கட்டப்பட்டது? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article