ARTICLE AD BOX
Vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் விஜயிடம் தோற்று போன ஒரு சுவாரஸ்ய அப்டேட் இணையத்தில் வெளியாகி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர்கள் அஜித், விஜய், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தான். இவர்கள் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் நடிகர் விஜயின் வசூலை இதுவரை மற்ற நடிகர்களாக தொடக்கூட முடியாத நிலை இருக்கிறது.
இதில் நடிகர் விஜய் நடித்த கடைசி இரண்டு திரைப்படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இப்படம் ரிலீஸாக இரண்டு நாள் இருந்த நிலையில் லியோ திரைப்படம் 12 லட்சத்து 78 ஆயிரம் டிக்கெட் விற்கப்பட்டு முதல் இடத்தினை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 6 லட்சத்து 36 ஆயிரத்து டிக்கெட் விற்கப்பட்டு இருக்கிறது.
இதை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் விஜயின் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இரண்டு நாள் இருக்கும் போது ஐந்து லட்சத்து 65 ஆயிரம் டிக்கெட் விற்கப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தாலும் சில பல காரணங்களால் லியோ சாதனையை முறியடிக்க முடியவில்லை.
ஆனால் பல மாதங்கள் எதிர்பார்ப்புக்கு பின்னர் வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஃபெப்ரவரி 6ந் தேதி வெளியாக இருக்கிறது. பொங்கல் தினத்தில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது வெளியாக இருக்கும் இரண்டு நாட்களில் இதுவரை 3 லட்சத்து 25 டிக்கெட் மட்டுமே விற்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது இடத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இரண்டு நாட்கள் இருக்கும் போது 2 லட்சத்து 98 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்கப்பட்டது. ஆறாவது இடத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் இருந்தாலும் அது இரண்டு நாள்கள் இருக்கும் போது 87 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்கபட்டது.