ARTICLE AD BOX
Published : 11 Mar 2025 11:12 PM
Last Updated : 11 Mar 2025 11:12 PM
"வெற்றியை அடைய எதையும் செய்ய தயார்” - ரோஹித் சர்மா உறுதி

மும்பை: எங்கள் அணியின் முக்கிய நோக்கம் வெற்றியைத் தேடுவதுதான், அதை அடைய எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ரோஹித் சர்மா கூறியதாவது: “நாங்கள் ஐந்து டாஸ்களிலும் தோற்றோம். ஆனால் ஒரு போட்டியை கூட இழக்காமல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். எந்த ஒரு தொடரிலும் தோல்வியின்றி இறுதி வரை செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் நாங்கள் அதைச் சாதித்தோம். சாம்பியன் பட்டம் வென்ற பிறகுதான் அதன் தனித்துவத்தை உணர்ந்தோம். இதை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். நாங்கள் முழு உறுதியுடனும் ஒருங்கிணைந்த அணியாகவும் விளையாடினோம். ஒவ்வொருவரும் தங்களுக்கான பங்கையும் பொறுப்புகளையும் தெளிவாகப் புரிந்து செயல்பட்டனர்.
நாங்கள் விளையாட்டின் மீதான உறுதியுடன் செயல்படுகிறோம். எங்கள் அணியின் முக்கிய நோக்கம் வெற்றியைத் தேடுவதுதான், அதை அடைய எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம். பும்ரா அணியில் இல்லை என்பதற்கான முன்னேற்பாடுகளை நாங்கள் செய்திருந்தோம். அவரது காயம் முழுமையாக குணமாக வேண்டியிருந்தது. ஏனெனில் அவர் இன்னும் பல ஆண்டுகள் விளையாட வேண்டிய வேகப்பந்து வீச்சாளர்.
இந்தக் குறையை எப்படி சமாளிப்பது என்று திட்டமிடும்போது, முகமது ஷமி எங்களிடையே இருந்தது பெரிய பலமாக இருந்தது. ஐசிசி போட்டிகளில் அவருடைய ஆட்டத்திறனை நினைத்துப் பார்த்தால், அவர் எப்போதும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் விளையாடிய இரண்டு போட்டிகள் எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தின. மேலும், அர்ஷ்தீப் மற்றும் ஹர்ஷித் போன்ற பந்துவீச்சாளர்கள் மீது நாங்கள் முழுமையாக நம்பிக்கை வைத்திருந்தோம். போட்டிக்கு முன்பு இருந்த 20-25 நாட்களை பயிற்சிக்கும், ஆடுகளத்தை ஆராய்வதற்கும் பயன்படுத்தினோம். இந்த முறையான அணுகுமுறைகளே பும்ரா இல்லாதிருந்தும் சிறப்பாக செயல்பட உதவின.
ஓய்வு குறித்து நான் தற்போதைக்கு எந்த முடிவையும் எடுக்கவில்லை. 2027 உலகக்கோப்பைக்கு விளையாடுவேனா என்பது பற்றி எல்லாம் இப்போது சொல்ல விரும்பவில்லை. தற்போது எனது கவனம் எனது ஆட்டத்திலும், அணியுடன் இணைந்து நேரத்தை செலவிடுவதிலும் உள்ளது. என்னை அணியில் என் சக வீரர்கள் விரும்புகிறார்களா என்பதே எனக்கு முக்கியமான விஷயம்” இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருந்த கேரள இளம்பெண் உயிரிழப்பு
- பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 30 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக தீவிரவாதிகள் அறிவிப்பு
- ‘இந்தியாவுக்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான நட்பு நம்பிக்கையின் பிணைப்பு’- பிரதமர் மோடி உரை
- விருதுநகரில் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!