ARTICLE AD BOX
தங்களுக்கு வரும் தடைகளை வாய்ப்புக்காக எண்ணுகிறார்கள். கடுமையான முயற்சியில் ஏற்படும் தோல்விகளில் இருந்து அடுத்த முறை எந்த தவற்றைத் தடுக்கலாம் என்று நினைப்பார்கள். ஓவ்வொரு தடை ஏற்படும்போது அதுவே பல புதிய முயற்சிகளை எடுக்க ஊன்று கோலாக எண்ணுவார்கள். தோல்விகளை தழுவுவதால் அது சவாலாக இருப்பதை உணர்கிறார்கள்.
தங்கள் எல்லைமீறிய விஷயங்களைப் பற்றி அனாவசியமாக கவலைப் பட மாட்டார்கள். அவர்களால் கட்டுப்படுத்தக் கூடிய முடிவுகள், செயல்பாடுகள் போன்ற விஷயங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார்கள். தங்களுக்கு சவாலான விஷயங்களைக் கையாள்வதில் பொறுப்பாக இருப்பார்கள். சூழ்நிலைக்கேற்றவாறு நடந்துகொள்வார்கள்.
தங்கள் மதிப்பீடுகள், மற்றும் வாழ்க்கை குறித்து கனவுகள் பற்றிய வெற்றியை தாங்களே முடிவு செய்வார்கள். கண் மூடித்தனமாக வெற்றியை விரும்பமாட்டார்கள். வெற்றிக்கான சரியான பாதையில் செல்வார்கள்.
பெரும்பாலானோர் சிறந்த நேரத்திற்காகவும், அனுமதிக்காகவும் காத்திருப்பார்கள். சமூக அங்கீகாரத்திற்காகவும் காக்கும் நேரத்தில் தங்கள் கனவையே இழக்க நேரிடும். ஆனால் வெற்றியாளர்கள் யாரிடமும் அனுமதி கேட்பதில்லை.
அவர்கள் நினைத்ததை நடத்தி அது வெற்றிகரமானதாக இருந்தாலும் சரி, தோல்வியானாலும் சரி உடனே அதைத்தொடர்ந்து அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்பார்கள். இதை அலட்சியம் என்று கூறமுடியாது. தான் எடுத்த முடிவுகளின் விளைவுகளில் இருந்து பாடம் கற்பதாக எண்ணுவார்கள்.
பலரும் மகிழ்ச்சியை நோக்கியே ஓடுகிறார்கள். பிசினஸ் வெற்றியால் பணம் குவித்து அதை மகிழ்ச்சி என்று நினைத்தால் தவறு. ஆனால் வெற்றிகரமானவர்கள் மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாக இல்லாமல் க்ரியேடிவிடி மற்றும் வளர்ச்சியில் குறியாக இருப்பார்கள். ஆத்ம திருப்தி ஏற்படுவதில் நோக்கமாக இருப்பார்கள்.
பலரும் கடுமையான விமரிசனங்களை ஏற்கத் தயங்குவார்கள். ஆனால் வெற்றியாளர்களோ விமர்சனங்கள் முலம் தங்களை இன்னமும் மேன்மை படுத்திக்கொள்வார்கள்.
பெரும்பாலானோர் தங்கள் கார்யம் ஆகவேண்டி சிலரிடம் பழகுவார்கள். ஆனால் வெற்றியாளர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மக்களுடன் சகஜமாக பழகுவார்கள். உறவுகளை மதித்து பழகுவார்கள். வாழ்க்கையே வியாபாரம் அல்ல என்பதை உணர்ந்து எல்லோருடனும் மிக சகஜமாக பழகுவார்கள். உறவுகளில் முதலீடு செய்தால் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் கூட உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதை அவர்கள் புரிந்துள்ளார்கள்.