வெற்றி பெற, சாதனை படைக்க எதையும் உடனே செய்யுங்கள்!

6 hours ago
ARTICLE AD BOX

வ்வளவு பெரிய காரியத்தைச் செய்து முடிக்கும் தகுதியும் திறமையும் இப்போது என்னிடம் இல்லை என்னை நான் தயார்படுத்தில் கொள்ளாமல் உடனடியாக இந்த வேலையை ஆரம்பித்தால் நான் தோல்வியைத்தான் தழுவ வேண்டியிருக்கும்.

முதலில் நான் என் செயல் திறமையை வளர்த்துக் கொள்ளப் போகிறேன். அதற்குச் சில ஆண்டுகள் பிடிக்கும். அதற்குப்பிறகுதான் இந்தக் காரியத்தை ஆரம்பிக்கப்போகிறேன் என்று காரியம் தொடங்குவதை நீண்ட காலத்திற்குத் தள்ளிப்போடாதீர்கள்.

அளவுக்கு மீறி முன் ஜாக்கிரதையுடன் செயல்படுபவர்கள் வாழ்க்கையில் சாதித்தது மிகவும் குறைவானதாகத்தான் இருக்கும்.

ஒருவன் சொந்தமாக வீடுகட்ட ஆசைப்படுகிறான் அவன் ஆசைப்படும் வீட்டைக் கட்டி முடிக்க ரூ. 3 லட்சம் செல்வாகும் எனத் தெரிகிறது. அந்தப் பணத்தை சம்பாதித்தவுடன் நான் வீடு கட்ட ஆரம்பிக்கப் போகிறேன் என்றால் இது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக்குறைவே. இதுபோல் முடிவெடுப்பவர்களின் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வாழ்நாட்களிலே கட்டாதவர்களாகத்தான் உருவெடுப்பார்கள்.

அப்படி ஒருவன் மூன்று லட்சம் சேமித்தாலும் கூட விலைவாசி உயர்வினால் அதே வீட்டைக்கட்ட அப்போது ஆறு லட்சம் தேவைப்படும்.

அதற்கு மாறாகக் கையில் இருக்கும் பணத்தைக்கொண்டு வீட்டுமனை வாங்கியவர்கள் வீடுகட்ட வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.

அவர்கள் நகையை அடகு வைப்பது, சேமிப்பு நிதியிலிருந்து கடன் வாங்குவது போன்ற வழிகளில் கொஞ்சம் பணம் திரட்டி வீடு கட்டும் பணியை ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
அலுவலகத்தில் அதிக நண்பர்களைப் பெறுவது எப்படி?
Do anything immediately to succeed

எனவே திட்டமிட்டு ஒரு செயலை நினைத்துவிட்டால் தாமதிக்காமல் உடனே செய்யும் பழக்கம் உயர்வைத்தரும் என்பதில் ஐயமில்லை.

ஒரு பெரிய காரியத்தை எப்படிச் சுலபமாக முடிப்பது என்பதைப் பற்றி ஹென்றிஃபோர்ட் கீழ்கண்ட அறிவுரையை வழங்கியிருக்கிறார். நீங்கள் செய்ய விரும்பும் அந்த காரியத்தை நிறைய சிறிய காரியங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால் ஒருநாள் அந்த பெரிய காரியம் முடிந்துவிட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள் என்கிறார். இது நிதர்சனமான உண்மை.

தள்ளிப்போடுதல்'. 'தாமதம்' என்ற வார்த்தைகளை நமது அகராதியிலிருந்து கூடுமானவரை விலக்கிவைக்க வேண்டும்.

எதையும் உடன் செய்கின்ற பழக்கம் கொண்டவனையே அனைவரும் விரும்புவார்கள்.

வெற்றி பெற்று சாதனைபடைக்க எண்ணுகின்ற நீங்கள், எதையும் உடனே செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

Read Entire Article