ARTICLE AD BOX
டிராகன் படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நேற்று (பிப்ரவரி 21) உலக முழுவதும் டிராகன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் லியோன் ஜேம்ஸின் இசையிலும் இப்படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கயடு லோஹர், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருந்தனர். சினேகா போன்ற சில கேமியோக்களும் ஒரு சர்ப்ரைஸான கேமியோவும் படத்தில் இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடாவடித்தனம் பண்ணும் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார். அதாவது கல்லூரி வாழ்க்கை எவ்வளவு முக்கியமானது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் கொடுத்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் டிராகன் படத்திற்காக கூடுதல் காட்சிகளும், திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் இப்படத்தின் வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.