வெறும் 10 ஓவர்.. 91 ரன்.. பாகிஸ்தான் மீண்டும் படுதோல்வி.. நியூசிலாந்து அணி அபார வெற்றி

14 hours ago
ARTICLE AD BOX

தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்திருக்கும் பாகிஸ்தான் அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் படுதோல்வி அடைந்த காரணத்தினால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு சல்மான் அலி ஆகா தலைமையில் இளம் டி20 அணி அறிவிக்கப்பட்டது. இதில் பாபர் அசாம் முகமது ரிஸ்வான் போன்ற நட்சத்திர வீரர்கள் நீக்கப்பட்டார்கள்.

சுருண்ட இளம் பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணியின் இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரும் அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு வந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை மைக்கேல் பிரேஸ்வெல் ஏற்றிருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் இருவருமே ரன் இல்லாமல் வெளியேறினார்கள். கேப்டன் சல்மான் அலி ஆகா 18, குஸ்தில் ஷா 32, ஜஹனத் கான் 17 ரன்கள் தாக்குப்பிடித்து எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி 18 புள்ளி நான்கு ஓவரில் 91 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து பந்துவீச்சில் ஜேக்கப் டபி 4, ஜெமிசன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

பத்து ஓவரில் முடிந்த போட்டி

இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டிம் செப்பர்ட் 29 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 44 ரன்கள் எடுத்தார். பின் ஆலன் ஆட்டம் இழக்காமல் 17 பந்தில் 29 ரன், டிம் ராபின்சன் ஆட்டம் இழக்காமல் 15 பந்தில் 18 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்க எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இதையும் படிங்க: நான் கிரிக்கெட்டை விட்டு விலக.. இந்த 4 விஷயம் என்னை விட்டு போகணும்.. அதுவரை தொடரும் – விராட் கோலி

பாகிஸ்தான் கிரிக்கெட் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் கேப்டன் பொறுப்பு உடனடியாக முகமது ரிஸ்வான் இடம் இருந்து பறிக்கப்பட்டு புதிய டி20 அணி சல்மான் அலி ஆகா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அணியும் கொஞ்சமும் எதிர்பார்ப்புக்கு தகுந்த வகையில் போராடி கூட தோற்காமல் படுதோல்வி அடைந்தது ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது!

The post வெறும் 10 ஓவர்.. 91 ரன்.. பாகிஸ்தான் மீண்டும் படுதோல்வி.. நியூசிலாந்து அணி அபார வெற்றி appeared first on SwagsportsTamil.

Read Entire Article