ARTICLE AD BOX
Kitchen Cooling Tips : கோடிகாலத்தில் கிச்சனில் சமைக்கும்போது குளிர்ச்சியாக இருக்க சில குறிப்புகள் இங்கே.

கோடை காலம் ஆரம்பமாகப் போகிறது. இந்த பருவத்தில் வெயிலின் தாக்கம் ரொம்பவே அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலையில், கிச்சனில் நின்று சமைப்பது ரொம்பவே கடுப்பாக இருக்கும். காரணம் சமைத்தால் அதிகமாக வியர்த்து கொட்ட ஆரம்பிக்கும். இல்லத்தரசிகள் சிறிது நேரம் கூட அங்கு நின்று சமைக்க முடியாத அளவிற்கு சூழல் இருக்கும். கோடை வெப்பம் மற்றும் கிச்சனில் சமைக்கும் வெப்பம் இவை இரண்டும் சேர்ந்து எரிச்சல், சருமத்தில் கொப்பளங்கள், வியர்க்குரு போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு தீர்வு எதுவுமே இல்லையா என்று இல்லத்தரசிகள் புலம்புகிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது. ஆம், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். கோடை வெப்பதிலும் உங்களது கிச்சன் குளுகுளுவென்று இருக்கும். இப்போது அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

காலை மதியம் என இரண்டு வேளையும் நீங்கள் தனித்தனியாக சமைக்கிறீர்கள் என்றால், கோடையில் அப்படி செய்யாமல் மதிய சமைக்கும் உணவையும் காலையிலேயே செய்து முடித்து விடுங்கள். அதுபோல என்ன சமைக்க போகிறீர்கள் என்பதே முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் சமையலறையில் அதிக நேரம் இருக்க வேண்டிய அவசியம் வராது. காய்கறிகளை கிச்சனில் வைத்து வெட்டாமல் காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வைத்து வெட்டவும். இதனால் உங்களுக்கு அதிகமாக வியர்க்காது.

கிச்சனில் அதிக நேரம் நின்று சமைக்கும் உணவை தயாரிப்பதற்கு பதிலாக மிகவும் சீக்கிரமே தயாராகும் உணவை சமைக்கவும். உண்மையில் புரோட்டின் வகை உணவுகள் சீக்கிரமாகவே வெந்துவிடும். எனவே புரோட்டின் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சமைக்கவும்.

சமைக்கும்போது கிச்சன் மற்றும் வீட்டின் ஜன்னலை திறந்து வையுங்கள். அப்போதுதான் சமைக்கும்போது வெப்பமானது வீட்டில் தங்காது, வெளியேறும். அதுபோல கிச்சனிலிருந்து புகையை வெளியேற்றும் ஃபேன் வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: எண்ணெய் பிசுபிசுப்பான கிச்சன் டைல்ஸ்.. ஒரு நிமிடத்தில் பளபளனு மாற டிப்ஸ்

பொதுவாக பெரிய பாத்திரத்தில் சமைக்கும் போது வெப்பமானது அதிகரிக்கும். மேலும் சமைக்க அதிக நேரம் எடுக்கும். இதன் காரணமாக கிச்சன் முழுவதும் வெப்பமாக தான் இருக்கும். எனவே நீங்கள் பெரிய பாத்திரத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக, சிறிய பாத்திரத்தை பயன்படுத்துவது தான் நல்லது.
இதையும் படிங்க: அட...கிச்சன் சிங்க் அடைப்பை நீக்க இப்படி ஈஸி வழி இருக்கா? இத்தனை நாள் இது தெரியாம பேச்சே!!

உண்மையில் கோடைகாலத்தில் உடலில் நீரிழிப்பு ஏற்படும். அதிலும் குறிப்பாக நீங்கள் கிச்சன் வெப்பத்தில் சமைக்கும்போது இன்னும் மோசமாகும். எனவே நீங்கள் உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். அப்போதுதான் நீங்கள் எளிதில் சோர்வடையாமல் சமைக்க முடியும். இதற்கு நீங்கள் நிறைய தண்ணீர் குடிப்பது மட்டும் போதாது, புதிய பழசாறுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள் இவை உங்களது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.