ARTICLE AD BOX
வெயில் காலங்களில் உடலுக்கு நிறைய நீர்ச்சத்து தேவைப்படுகிறது. அதற்கு உணவில் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும். உணவு மூலமாக நமது உடலை ஹட்ரேட்டடாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே காலை உணவான தோசையில் சுரைக்காயை சேர்த்து எப்படி தோசை சுடுவது என்று ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
சுரைக்காய்
அரிசி
உளுத்தம் பருப்பு
வெந்தயம்
இஞ்சி
பச்சை மிளகாய்
சீரகம்
கல்லுப்பு
நெய்
செய்முறை:
முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தய விதைகளை கழுவி தண்ணீரில் ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். மூன்று மணி நேரம் கழித்து ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட வேண்டும்.
இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கல்லுப்பு, சுரைக்காய் துண்டுகள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும். அரைத்த மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
தோசை கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி மாவு சேர்த்து, தோசை ஊற்றி, சுற்றிலும் நெய் தடவவும். தோசை ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
தோசை இருபுறமும் வேக விட்டு எடுத்தால் அவ்வளவுதான், மிகவும் சுவையான சுரைக்காய் தோசை ரெடியாகிவிடும். இதற்கு தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.