வெயிலால் சருமம் கருத்துப்போச்சா? இந்த ஃபேஸ் பேக்கை தினமும் யூஸ் பண்ணுங்க.. வெள்ளையாயிடும்..

3 hours ago
ARTICLE AD BOX

வெயிலால் சருமம் கருத்துப்போச்சா? இந்த ஃபேஸ் பேக்கை தினமும் யூஸ் பண்ணுங்க.. வெள்ளையாயிடும்..

Beauty
oi-Maha Lakshmi S
Published: Wednesday, March 19, 2025, 19:46 [IST]

Skin Care Tips In Tamil: தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வெளியே சிறிது நேரம் சென்றாலே சருமம் கருமையாகி, அடையாளம் தெரியாத அளவில் மாறிவிடுகிறோம். இந்நிலையில் கோடையில் சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களை கொடுக்க வேண்டியது அவசியம். அதுவும் சூரிய கதிர்களால் பாதிக்கப்பட்ட சரும செல்களை ஆற்றும் வகையிலும், குளிர்விக்கும் வகையிலும், சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும்.

என்ன தான் சூரியன் வைட்டமின் டி-யின் இயற்கையான மூலமாக இருந்தாலும், அதன் கடுமையான கதிர்கள் நீண்ட நேரம் சருமத்தில் படும் போது, அது சருமத்தை சேதப்படுத்துவதோடு, சருமத்தின் நிறத்தை அடர்பழுப்பு நிறமாக மாற்றிவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெயிலால் நிறம் மாறிய சருமத்தை எதிர்த்துப் போராட பல்வேறு கெமிக்கல்கள் நிறைந்த பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன.

Skin Care Tips Top 7 Home Remedies To Remove Sun Tan In Summer

ஆனால் ஒருசில இயற்கை பொருட்களும் வெயிலால் நிறம் மாறிய சருமத்தை சரிசெய்ய பெரிதும் உதவி புரிகின்றன. நீங்கள் இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண விரும்பினால், கீழே ஒருசில வீட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

1. கற்றாழை

கற்றாழை ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. அதுவும் நற்பதமான கற்றாழை கருமையான சருமத்திற்கு நல்ல நிறத்தைத் தரும். அதற்கு நற்பதமான கற்றாழை ஜெல்லை எடுத்து இரவு தூங்கும் முன் சருமத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வையுங்கள். பின் மறுநாள் காலையில் முகத்தைக் கழுவுங்கள். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வர, ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

2. எலுமிச்சை மற்றும் தேன்

தேன் மிகச்சிறந்த மாய்ஸ்சுரைசர் மற்றும் சருமம் அதிகம் வறட்சி அடைவதைத் தடுக்கும். அதேப் போல் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். இப்படிப்பட்ட எலுமிச்சையின் சாற்றினை ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் சில துளிகள் தேனை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 4 முறை பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

3. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் குளிர்ச்சி பண்புகளைக் கொண்டது. வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சாந்தப்படுத்தி, மேம்படுத்த உதவுகிறது. இப்படிப்பட்ட வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதை பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் பயன்படுத்தி வர, சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

4. தயிர் மற்றும் மஞ்சள்

தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவைத் தருவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். அதேப் போல் மஞ்சள் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யும். அதற்கு ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

5. தக்காளி கூழ்

தக்காளியில் லைகோபைன் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையை திறம்பட நீக்கும் சக்தி கொண்டது. அதற்கு நன்கு கனிந்த தக்காளியை அரைத்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி கோடைக்காலத்தில் தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையை நீங்கும்.

6. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் கேட்டகோலேஸ் அதிகமாக உள்ளது. இது வெயிலால் கருமையான பகுதியை வெள்ளையாக்கும். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, கருமையான பகுதிகளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முகம் பிரகாசமாக இருக்கும்.

7. பால் மற்றும் அரிசி மாவு

பால் சரும கருமையைப் போக்கும் மற்றும் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும் அற்புதமான பொருள். அதேப் போல் அரிசி மாவு சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். இப்படிப்பட்ட அரிசி மாவுடன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் இரவு நேரத்தில் பின்பற்றி வர, சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Read more about: skin care beauty tips
English summary

Skin Care Tips: Top 7 Home Remedies To Remove Sun Tan In Summer

Skin Care Tips In Tamil: In this article, we have shared some home remedies to remove sun tan in summer. Read on to know more...
Story first published: Wednesday, March 19, 2025, 19:46 [IST]
-->
Story first published: Wednesday, March 19, 2025, 19:46 [IST]
Read Entire Article
LEFT SIDEBAR AD

Hidden in mobile, Best for skyscrapers.