ARTICLE AD BOX
சென்னை,
தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்றும் (20-03-2025), நாளையும் (21-03-2025) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.